எயிட்ஸ் விழிப்புணர்வு

Thursday, December 1, 2011

இது யாழ்ப்பாணம் குற்றச்செயல்கள் மட்டும் கணக்கே இல்லை ஒருவர்தான் எய்ட்ஸ் நோயாளியா?



tamilenn news => இலங்கை ஆட்சியாளர்களால் காலம் தொட்ட தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு வருகின்றமை வழமை.

அத் திட்டமிடல்கள் சிலவேளைகளில் தோல்வியைக் கண்டிருந்தாலும் கூட அண்மைக் காலத்தில் பெரு வெற்றியை ஆட்சியாளர்களுக்கு அளித்துள்ளது எனலாம்.

ஏனெனில் எம்மினத்தின் சில புல்லுருவிகள் குருவிச்சை மரம் போன்று ஒட்டி நிற்பது அவர்களுக்குத் தற்காலத்தில் ஏற்பட்ட வெற்றிகளுக்குக் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

இது இவ்வாறிருக்க இலங்கையில் விபச்சாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என ஒரு அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தின் தாவடி, மானிப்பாய்ப் பகுதியில் மகரகமவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், அப் பெண் பாலியல் தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

எனவே இவ்வாறான சம்பவங்கள், தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளைகளில் யாழ்ப்பாண இளைஞர்களை பால் நிலை கொண்டு தாக்கும் ஒரு செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அதாவது யாழ்ப்பாண இளைஞர்களின் போராட்டங்களையும், அவர்கள் கொண்டுள்ள தமிழ்த் தேசிய உணர்வலைகளையும் திசை திருப்பும் நோக்கத்தோடும் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனலாம்.

யாழ்ப்பாபணப் பகுதிகளில், பாலியல் தொழிலில் ஈடுபடும் சிங்களப் பெண்களைக் களமிறக்கி அப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்பி அவர்களை அழிக்கும் ஒரு நயவஞ்சகச் செயல் நடந்தேறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றது.

எனவே கடந்த கால ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களை அழிக்கும் திட்டமிடலுக்கு ஏற்ப தற்கால அரசு இச் சூழ்ச்சியைச் செய்து யாழ்ப்பாண மக்களின் கலாசாரத்தைச் சிதைத்து இளைஞர்களை இயற்கையின் உபாதைக்குள் தள்ளும் ஒரு திட்டம் நடந்தேறப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது
///////////////////////////////////////////////////////////////////

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அரங்கேற்றப்பட்டு வந்தது சுமங்கலி எனும் விபச்சார விடுதி. ஒரு ஆணும் பெண்ணும் தங்குவதற்கு 500 ரூபாய் வீதம் அறவிடப்பட்டு விபச்சாரத்திற்கு வித்திட்டதே இந்த விடுதி.

ஆனால் இன்று யாழ்ப்பாணப் பொலிஸாரின் திடீர் முற்றுகையினால் இவ் விடுதியின் உரிமையாளர் உட்பட 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமங்கலி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடியது இவ்விடுதியும் அதன் உரிமையாளரும்.

இதில் பல மாதங்களாக அரங்கேற்றப்பட்டு வந்த விபச்சாரம் தொடர்பில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு பகிரங்கமாக நடத்தப்பட்ட விபச்சாரம் மாநகர சபை முதல்வருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியமான விடயம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் இங்கு விபச்சாரத்திற்கு வித்திடுகின்றார்கள் எனத் தெரிவித்து யாழ்.மாநகர முதல்வர், சுமங்கிலி விடுதிக்கும், அது செய்த விபச்சாரத்திற்கும் துணை புரிந்துள்ளதாகவே சந்தேகப்பட வைக்கின்றது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்.நகரப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த சுமங்கலி விபச்சார விடுதி யாழ் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு எட்டு ஆண்களும், ஜந்து பெண்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது. யாழ்.பொலிஸாரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடுதி உரிமையாளர் றஞ்சன் என்று அழைக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை திங்கட்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப் பகுதியால் இரு தடவைகளுக்கு மேல் யாராவது பயணிப்பார்களாக இருந்தால் அவர்களை இடைமறித்து இப் பாதை ஊடாக அடிக்கடி பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கும் தொனியில் மிரட்டல் விடுக்கப்படும்.

அத்துடன் ஆங்காங்கே இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் உள்ளே நடைபெறும் விபச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக நிற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க மேற்படி விடுதியின் உரிமையாளர் யாழ்ப்பாண அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்பது தங்களது விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக ஒரு விபச்சார விடுதியை பொலிஸாரினால் முற்றுகையிட்டு அங்குள்ளவர்களைக் கைது செய்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் இவ் விடுதியின் முற்றுகை போல் பொலிஸாரின் செயற்பாடுகள் அமையும் பட்சத்தில் அவர்கள் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை வலுப்பெறும்.

மாறாக கட்சியின் பெயரால் இவர்கள் தப்பித்துக் கொள்வதும், அதனைப் பொலிஸார் கண்டு கொள்ளாதிருப்பதும் யாழ்ப்பாணக் கலாசாரத்தைச் சட்டமே குழிதோண்டிப் புதைப்பதாகவே அர்த்தமாகும்



/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக குற்றச் செயல்கள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், பாலியல் வன்முறை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதாகவும் இதனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண பிரதிக் காவல்துறை மா அதிபர் வீ.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண ஹோட்டல்கள் மற்றும் விதிகளில் அதிகளவு தங்குவதனால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

2010 aids day

யாழ்.மாவட்டத்தில் 42 எயிட்ஸ் நோயாளர்கள்! எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்: சுகாதார பணிப்பாளர்
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 04:05.09 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 42 எயிட்ஸ் நோயாளர்களில் 23 நோயாளர்கள் இறந்துள்ளதுடன் 19 நோயாளர்கள் வாழ்ந்து வருவதாகவும் இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.
ஏ9 தரைவழிப்பாதையின் திறப்பு மற்றும் நீண்டகாலப் போர் அதனாலான இடப்பெயர்வுகள் போன்றவற்றினால் எங்களுடைய கலாச்சார விழுமிய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டு விட்டதாக கூறிய பணிப்பாளர்.
இதிலிருந்து மீட்சி பெறுவதற்கு எமது சமுகத்திற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனச் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள எண்ணிக்கையை விடவும் அதிகமானவர்கள் எமது சமூகத்தில் வாழ்கின்றனர்.
அவர்களும் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் முலமா ஏனையவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். போருக்குப் பின்னரான அண்மைக்காலத்தில் மட்டும் மாவட்டத்தில் சுமார் அதிகமானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக. அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2011 aids day

யாழில் 43 பேருக்கு H.I.V எயிட்ஸ் தொற்று

யாழ்ப்பாணத்தில் போருக்கு பின்னைய காலங்களில் சமூகக் கட்டுப்பாடுகள் சீர்குலைக்கப்பட்டு பாலியல் நோய்கள் இறக்குமதியாகிக் கொண்டு இருக்கின்றது எனவும் இதுவரை யாழில் 43 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாகவும் 23 பேர் எயிட்ஸ் நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு தியாகிகள் அறங்கொடை நிலையத்தில் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். இலங்கையில் வடமாகாணம் இந்த எயிட்ஸ் நோயின் தாக்த்தில் ஜந்தாவது இடத்தில் உள்ளது. வடமாகாணத்தில் 503 பேர் எச்.ஜ.வி தொற்குக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் யாழ்ப்பாணத்தில் 43 பேர் எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Saturday, November 26, 2011

மாணவர்களுடனான கருத்துப்பகிர்வில்

போரின் பின் பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் விதவையாக்கப்பட்டநிலை இதை மெருகேற்றும் வண்ணம் போரில் ஆண்கள் கொல்லப்பட்டமை அத்துடன் வாழ்வில் முதன்முதலாக வேலை தேடி செல்கின்றனர் இவை யாவுமே விரும்பியோ விரும்பாமலே பாலியல் பண்டத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாகின்ற நிலையில் வறுமையும் வலுச்சேர்க்கும் என்றால் தவறில்லை ஈராக் யுத்தத்தின் பின் சிரியா யோர்தானில் தஞ்சாம் புகுந்த அகதிகள் நிலை பற்றி உலகத்தின் பார்வை அவ்வாறே அமைகின்றது இதுபோலவே தலிபான்களின் வீழ்ச்சியுடன் இறுக்கமான கலாசாரம் தளர்வடைந்ததால் எயிட்ஸ் நோய்த்தெற்று எதிர்கொள்ளப்பட்டமை நடந்தேறிய விடயமே ஆகும் இவ்வாறன நலிவுற்ற நிலைகளை இலக்காகக் கொண்டு பாலியல் தொழில் முகவர்களும் நகர ஆரம்பிக்காமல் இருப்பார்கள் என்றால் அது மடமைத்தனம் எனறே கூறவேண்டும். எயிட்ஸ் பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம் போரின் பின் எம்மினம் பெரியதொரு திறந்த கலாசாரத்தினுள் நுழைந்து இரு வருடம் கடந்துவிட்டது கண்ணுக்குதெரியா பெரியதொரு அழிவை எதிர்கொள்கிறது ஆகவே காலம் கடந்தபின் எனினும் ..எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு உருவாகுமா அன்றேல் தொற்று தன் முழு வீச்சத்துடன் பரவிவிடும் என்பது  உறுதி இதன் பின் மருத்துவத்துறையால் எயிட்ஸ் நோய்க்கட்டுபாடு என்பது அவ்வளவு சுலபமானதாக அமையமாட்டாது இன்னும் மருத்துவத்துறையால் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கோடிட்டுகாட்டப்படும் விடயமாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து கூட நோயின் தீவிரத்தன்மை குறைக்குமேயன்றி குணப்படுத்த மாட்டாது எனவே இக்கொடிய நோயின் விசமத்தனமான பரவல் கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு யாவர்க்கும் உரியதே.. 
சிவாஜி கெல்த் விங்ஸ் அமைப்பினர் வன்னியில் மாணவர்களுடனான கருத்துப்பகிர்வில் மூலம் இம்மாணவர்கள் எய்ட்ஸ் நோயின் கட்டற்ற பரவல் குறித்து விழிப்படைவதற்கும் கல்வியில் ஏற்பட்ட நீண்டகால இடைவெளியை எதிர்கொள்ள நினைவாற்றலை வளர்க்கவும் தன்னம்பிக்கையுடன் சவால்கள் மிக்க வாழ்வை எதிர்கொள்ளவும் ஆரோக்கியம் மிக்க எதிர்கால சமுகத்தை உருப்பெற செய்யும் நோக்குடன் ஒழுக்கமைக்கப்பட்ட கருத்துப்பகிர்வுகளின் படங்கள் வருமாறு



Saturday, March 19, 2011

உலக தமிழ் உறவுகளே


போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது
போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம்
இது மருத்துவத்துறையும் தன்னை வியாபாரரீதியில் தயார்ப்படுத்தி செல்வதால் உளவியல்ரீதியாகவும் நோயியல் ரீதியாகவும் மக்கள் ஒர் துன்ப சாகரத்தில் தத்தளிக்கும் தன்மையையே காணமுடிகின்றது திருப்பதிபோன்ற சினிமா படங்களை நேரில் தரிசிக்கும் நியதி இன்னும் பல மைல் தூரம் சென்று கண் சத்திர சிகிச்சையை கண்டியில் மேற்கொள்ள வேண்டி துன்பங்கள் சூழ்ந்து விட்டது
வன்னி மற்று நகரை விலகிய பகுதிகளில் கர்ப்பவதிகளின் அனாவசிய மரணம் இவ்வாரே செல்லின் உலகத்தின் வேறு இடங்களை சொல்வதற்கு பதிலாக எமது தாய்த்திரு நாட்டில் பல இடங்களை குறிப்பிடும் வேதனையை நாம் உணரதவற மாட்டோம் என்பதே நியதி
திறந்தபாலியல் கலாசாரப்பின்னியில் கலாச்சார சீரழிவுகள் மிகையுற்ற நிலையில் இளவயதினர் விழிப்புணர்வு எதுமின்றி உயிர்கொல்லி நோயில் வீழ்த்தப்படும் கொடூரம்
புத்தியீவிகள் சிந்திக்க தவறிவிட்டதன் விளைவாக உயர்கல்விப்பிடங்களை கொலை முயற்சியும் வருடாவருடம் தற்கொலையும் தான் அலங்கரித்தால் மக்கள் உணரவேண்டிய விடயங்கள் பல உள்ளதே காலத்தின் தேவையாகும்
பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஒடலாம் -ஆனால்
விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும்

மாற்றமடையும் வாழ்க்கை முறையால் சமுகம் எதிர்கொள்ளும் ஆபத்து




.....................................................................................................................................................................


இலங்கையில் 40 ஆயிரமத்துக்கும்அதிகம் விப்சாரிகள் உள்ளனர் என்று அண்மையில் வெளியான தகவல்கள் அதிரவைக்கின்றன இன்னும் அவை 500 பேரில் ஒருலர் விபசர்ரத்தில் ஈடுபடுவதாகவும் உறையவைக்கின்ற்ன அதுதாண்டி சரியாகக் கணக்கிட்டால் ஒருலடசத்தை விஞ்சிவிடுவார்கள் என்றும் அடுக்கிக் கொண்டே நகர்கின்றனர் அவர்களில் எயிட்ஸ் தொற்றியவர்கள் இத்தனை பேர் இவை எல்லாம் கேட்கவே தலை விறைக்கவைக்கினறவை ஏனெனில் சாதாரணமாக பார்ப்பின் பண்பாடு கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிட்டது என்றில்லை இத்தனை பேர் வாலிபத்தின் பின் வெறுமையாகப் போகின்றனர.;.. குறித்த வயது எல்லையின் பின்னர் நடுத்தெருவுக்கு வரப்போகின்றனர் என்றால் கண்ணீர் தான் விட வேண்டும் இவர்கட்கு எப்படித்தான் புனர்வாழ்வு யார் தான் கொடுப்பாரே.. வறுமை தான் இவர்களை இங்கு தள்ளுகின்றதென்றால் இன்னும் கொடிய வறுமையுள் வீழமலே வீழ்ந்து விட்ட கொடுமை பற்றி சிந்திக்கவேண்டியே உள்ளது. பொருளாதாரத்தை ஈடுசெய்யும் நோக்கில் பெண்களும் கைச்செலவுக்காக யுவதிகளும் பதவிகள் சலுகைக்காகவும் என்று நகர்கின்ற விபச்சாரத்தின் வர்ணம் ப+சிய பக்கங்களே வெளித்தெரிகின்றன இவர்களின் வறுமை தோய்ந்த வயோதிபம் பற்நி எவரும் கதைப்பதே இல்லை எந்தவொரு நாட்டிலும் பாலியல் தொழிலாளர்கட்கு ஓய்வுதியம் கொடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. மேலைத்தேய நாகரிகத்தின் ஆளமைக்குள் எமது சமூகமும்; மெல்ல மெல்ல நகர்வதை நாம் காண முடிகின்றது. நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் காதல் மற்றும் காதலை அண்டியதாக மேலைத்தேய பாணியில் அமைந்த (dating) பொழுது போக்கு வாழ்க்கைமுறை இளவயதினரை மிகவும் கவர்ந்து வருகின்றது. இவ்வாழ்க்கை முறை எமது சமூகத்தினுள்ளும் நுழைகின்றது. இது பற்றி கவனம் செலுத்த வேண்டிய தேவை யாவருக்கும் உரியதே சினிமாப்பாடல்கள் தொடக்கம், சின்னத்திரை வரை காதலை மையமாகக் கொண்டே நகர்கின்றது. அது மட்டுமல்லாது பாடல்வரிகள் கூட மீசைவைத்த செடிகொடியா? ஆசை உனக்கில்லையா என்று உசுப்பேத்துவனவாகவே அமைகின்றன. இவை தாண்டி ஒரு கொக்கோகோலாவில் இரு குழாய் வைத்து என்று தீயை மூட்டும் தன்மையைத்தான் காண்பிக்கின்றன.இதை விஞ்சி வண்டே மட்டும் கேள் பிரன்டா வாறிய என்றெல்லாம் விபசாரத்திற்கு விருந்துவைத்தால் நிலைமை என்னவாகும். மனித வாழ்க்கைக் காலத்தை பார்ப்பின் எண்பது வயது வரையும் வாழும் பெண்ணை எடுத்துக் கொண்டால் இவரது வாழ்வில் உதாரணமாக பாலியல் ரீதியாக உச்சதொழிற்பாட்டை 30-45 வரையில் கொண்டிருப்பினும் மிகுதியான காலம் சுமார் 35 வருடங்கள் மந்தமான அதாவது பாலியல் செயற்பாட்டின் செயற்திறன் குறைவடைந்து உள்ளதை அறியலாம். இது எவ்வாறு இருக்க மேலைத்தேய வாழ்க்கை முறை பாலுணர்வுகட்கு தீனிபோடுவதாக அன்றி விருந்து கொடுப்பது போன்ற விதமாகவே உள்ளது. இதனூடு கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெற்றோர் அற்ற சிறுவர்கள் வாழ்க்கைத் துணை அற்ற பெண்கள் என்று மிகவும் பாரதூரமான பக்கங்களையே நமது நாட்டில் உருவாக்கிச் செல்கின்றது. இவை மேலும் விபச்சாரம் சிறுவர் துஷ்பிரயோகம் என்று பெரும் விசவிருட்சங்களையே ஆணிவேருடன் மண்ணில் நிலைகொள்ளச் செய்கின்றன. மேலும் எது சரி எது தவறு என்று கூற முடியாத அளவுக்கு தவறுகளையே கலாச்சாரமாக மாற்றும் ஈர்வையே உள்ளது. உலகமயமாதல் என்று கூறிக்கொண்டு கிராமத்தை விட பிற்பட்ட ஒரு வாழ்வு அதாவது கிராமப்புறங்களில் முன்பு அடிதடி, விபச்சாரம் என்பன காணப்பட்டன. எனினும் அவை தற்போது நாகரிகம் மிக்கவர்கள் என்று கூறிக்கொண்டு நகரவாழ்வில் அடிதடி ரவுடிஷம் என்றும், விபச்சாரம் dating livetogether என்றும் பெயர் கொண்டு அன்பு, பண்பு, பாசம், அர்ப்பணிப்பு, விட்டுக்கொடுப்பு எல்லாவற்றையும் சிதையேற்றி தீ வைக்கும் மேலைத்தேய வாழ்க்கைமுறை. ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கு போது மனதை உறுத்துவதாகவே உள்ளது. ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் ஏற்புடையது என்று நோக்கும் போது மனதை உறுத்துவதாகவே உள்ளது ;ஒரு பெண்ணின் ஆயுட் காலம் 45 வயதுடன் முடிவடையும் என்றால் மேலைத்தேய வாழ்க்கை முறையை வரவேற்று அதற்கு விருந்து வைக்கலாம் எனினும் அவ்வாறில்லை ஒரு பெண்ணின் ஆயுட்காலம் 80 வயது எனக் கொள்ளின் 45 வயதின் பின்னான காலம் வெறுமையாகவே காணப்படும். இதைவிட மேற்படி வாழ்க்கைமுறையைபெரிதும் கையாளும் வர்க்கம் பாலியல் தொழிலாளர்கள் என்றே கூறலாம் இவர்கள் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதியை தனிமையிலும் வறுமையிலுமே கழிக்கின்றனர். ஒரு பெண்ணின் உடற் தொழிற்பாட்டை எடுத்து நோக்கும் போது மாதவிடாய் என்பது முக்கியம் பெறுகின்றது. அதுபோல மாதவிடாய் நிறுத்தம் என்பதும் அதைவிட முக்கியம் பெறுகின்ற ஒரு விடயமாகும். இதன்பின் (மாதவிடாய் நிறுத்தத்தின்) ஒரு பெண்ணின் உடல், உள ரீதுpயாக பல அசௌகரியங்கள் உணர ஆரம்பிக்கப்படுகின்றன. இவை post menopausal syndrome எனப்படும். அதாவது… உளரீதியாக… • பதற்றமடையும் தன்மை, • மனதில், ஆறதலின்மை, • தூக்கமின்மை, • எதிலும் கவனம் செலுத்த முடியாமை, • மனதளர்ச்சி, • இலகுவில் சினமுறல், • நெருக்கீட்டு தாக்கங்கள் மற்றும் உடல் ரீதியாக.. • அதிககளைப்பு, • மூச்செறிதல், • உடல் நிறை அதிகரித்தல், • உடல் உஷ்ணமாகி இருத்தல். • அத்துடன் சிலருக்கு உடலில் எரிவு இருப்பதாக உணர்தல் இவற்றோடு பாலியல் ரீதியாக… • பெண் உறுப்பின் நெகிழ்தன்மை குன்றல் வரட்சியடைதல் போன்றவற்றுடன் • உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படும் இவற்றூடு பார்க்கின்ற போது மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்த மட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. மேலும் பெண்ணின் பாலியல் ரீதியான உடற்தொழிற்பாடும் மாதவிடாய் நிறுத்தத்துடன் ஏற்படும் ஓமோன் பற்றாக்குறையால் எல்லைப்படுத்தப்படுகிறது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண் துணையை தேடும் மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும், பாதுகாப்பையும் வழங்கக் கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றனர். இவர்கள் இந்நிலையை அணுகும்போது இவர்களின் வாழ்க்கை முறையால்.. இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப் போன ஆண்கள் இளம் யுவதிகளை நாடுவதாலும் இன்னும் dating livetogether போன்றவை குடும்ப வாழ்க்கை முறை, திருமணம், குழந்தை என்னும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொளளாத ஒரு தன்மை உடையதால் இவ்வாழ்க்கை முறையினூடு குறித்த வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர். இவ்வாறான வாழ்க்கை முறையின் தன்மையை அறிந்தும் அறியாமல் நம் சமூகத்தில் நகரை அண்டிய கற்றவர்கள் பெரிதும் தமது தொழில் நிமித்தம் உதாரணமாக நகரத்தில் தொழில் புரிவோர் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து தமது செலவுகளை பகிர்ந்து கொண்டு வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் பின் இவர்களில் எவராவது ஒருவர் வேலையில் இடமாற்றம் பெறின் புதிய இடத்தில் அவ்வாறான வாழ்க்கையை அமைப்பதும், புதிய துணையை தேடிக்கொள்வதும் என்று livetogether வாழ்க்கை முறையும். இவ்வாறான வாழ்க்கை முறையினுள் விபச்சாரதொழிலை மேற்கொள்ளும் பெண் தனக்கென ஒருவாழ்வு வேண்டும் என்று எண்ணுவதற்கு வேணடிய தேவை இருந்தால் தானே எதோ தனது உடற்ரேவைகள் நிறைவடைந்து விட்டன எண்ணம் குடும்பம் கத்தரிக்காய் எல்லாம் எதற்கு சுற்றித்திரியும் காற்று எதற்கு நான் துவிச்சக்கரவண்டி சில்லினுள் மாட்டிக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு குஷியான வேலையில் திரியும் போது அவ்வளவிறகு சிந்திக்க முடியாது காலம் கடந்த பின் பொதுவாக குழு முறைப்பாலியலில் ஈடுபடும் பெண்கட்கு தமது உடலே ஓரு வெறுப்புக்குரிய பொருள் என்று எண்ணும் மனநிலைதான் உருவாகின்றது எனின் அனுபவசாலிகளின் வயோதிபகாலம் பற்றி அவர்கள் நூல் எழுதினால் தான் தெரியும் விபச்சாரம் செய்யும் பெண்கள் அதை மெருகேற்றி dating செய்கின்றதாககருதுகின்ற கொடுமை. எங்கே அவர்களை தம் முன்னோரின் துன்பசாகரத்தை பற்றி சிந்திக்க விடும் ஒரு பிரச்சனை பற்றி கதைப்பதாயின் அப்பிரச்சனையினுள் இருப்பவனின் கண்களுடாகத்தான் பார்க்க வேண்டும் அவ்வாறு பார்க்கின்ற போது அவர்களின் உணர்வு நிலையை ; நினைவிழந்ததென்றே amnestic கருத கூடியதாகின்றுது இவ்வாறுபட்ட நிலையில் குடும்பம் பற்றி நினைப்பதே பிற்போக்கு என்பது அவர்களின் வாதம் குடும்ப வாழ்வு என்று கருதுமிடத்தில் பாலியல் ரீதியாக அன்றி பாசப்பினைப்பினுடான வாழ்க்கை காலமே பெரியதொரு வருடகாலம் என்ற நிலை காணப்படுகின்றது பாலியல் என்பது வாழ்வின் சுவையூட்டி என்றே அமைகின்றது பாலியல் தேவைகளுக்கு தீனிபோடும் அல்ல விருந்து போடும் dating வாழ்க்கை முறையும் … குறித்த வயதெல்லையின் பின் வரண்டு போய் விடுகின்றது….அதாவது வாலிபத்தின் காலம் முடிவுறுவதுடன் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. இன்னும் விபச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும் முகவர்கள் இவர்களை மருத்துவரிதியாக பரிசேதித்து தமது சேவையை செய்வுத என்புதும் வினாவாகவே அமைகின்றது மருத்துவ உலகில் கூட வியாபாரம் நுழைந்து விட்டநிலையில் விபச்சார முகவர்கள் இந்தளவில் நேர்மைத்தன்மை கொண்டிருப்புது பற்றி யோசிப்பதே சாலவும் நன்று இது இவ்வாறிருக்க எயிட்ஸ் தொற்று பற்றி கருதும் போது விபசாரிகளின் சிறப்புத்தேர்ச்சி இதனுடு எளிதில் உச்ச நிலை அடைதல் இதனால் மிகையளவு இனப்பெருக்கச் சுரப்பு பாதுகாப்புறைகளை தாண்டும் நிலை ஏற்படாமல் இருப்புது அரிது இதனால் மனைவியிடம் எதிர்பார்த்த இன்பத்தை விட மேலதிக கொடுப்பனவாக எயிட்ஸ் கிடைப்புது பெரும் வெகுமதி என்றே கூறவேண்டும் .இவ்வாறு கொடிய தொற்றுநோய்களையும் கருப்பை சார் புற்றுநோய்களையும் விபசாரம் வெகுமதியாய் கொடுக்கும் என்பது அறிந்தும் அறியாததே என்றே உள்ளது இன்னும் கூறுவதானால் விபசார விதைகள் தூவப்படும் சமுகத்தில் நோயுடன் கூடிய ஆரோக்கியமற்ற தன்மைமேயே பலித விளைவாகி சமுகம் நலிவுற்றுப் போகும்

எயிட்ஸ் நோயை எதிர் கொள்ளுமா?.... எம்மினம் ….




இந்தநிலை இனி எந்த மண்ணிலும் வேண்டாம்


டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரணம் தான் இருக்கும் என்னும் நிலையே உள்ளது

மேலும் திடீர் மாற்றங்கள் உருவாகியதன் பலித விளைவு திறந்த பாலியல் கலாசாரத்தை திணித்து விட்டதென்றால் தவறில்லை எதிர் கொள்ளமுடியாத உணர்வுத்தடுமாற்றம் இளம்சந்தியினரை மிகவும் பாரதூரமாக பாதிக்காது இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கூறவேண்டும் எமது மக்கள் மத்தியில் கலாச்சாரகட்டமைப்பு என்பது முற்றுமுழுதாகவே சிதைக்கப்பட்டு விட்ட ஒரு நிலை விரும்பியோ விரும்பாமலோ வாங்கிக்கொணட பரிசாகவே உள்ளது இத்துடன் எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வும் அருகிவிட்டது எயிட்ஸ் நோய் பற்றிய அச்ச உணர்வும் குன்றிவிட்டது எயிட்ஸ் தொடர்பான பதாகைகள் கூட ஒளியிழந்துவிட்டன இதற்கு காரணம் முன்பிருந்த சூழ்நிலை இதன்போது மிகவும் இறுக்கமான கலாச்சார கட்டமைப்பு காணப்பட்டது இதனால் விழிப்புணர்வு பற்றி அதிகம் யோசிக்கவேணடி ஏற்படவில்லை எனறே கூற வேண்டும்

பரீடசை அறை தொடக்கம் பாடம் கற்கும் இடம் வரை பாலியலே செய்முறை சோதனை என்னும் காலமாகிவிட்ட நிலை….கல்வி குற்றிழந்து கலவியாகி…. ;கற்றதற்கு மாறாய் ஒழுகும் கணவான்கள் அது தாண்டி பாலியல் தொழிற்சாலை போன்று வளம் பெற்றுவிட்ட தொழிற்றுறை ..கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன வல்லுறுவுகள் பல காதல் என்னும் பெயரில் மாங்கனி உண்ணும் பஞ்சபாண்டவர் போன்று மாறிவிட்டன அனேகமான காதல்கள்… கருத்தடை மாத்திரைகள் தட்டுப்பாடடில்..சட்டம் தூங்கும் நிலையில் ..கற்பை பறிகொடுத்த யுவதி தீயில் வீழ்வதா இல்லை கண்ணீரிலா..

இன்னும் பலபடி நகர்ந்து வேற்று கிரகவாசிகள் விபச்சாரத்திற்காக வந்திறங்கிய காட்சிகள் போன்று ஆடைக்கலாச்சாரம் அது ஊருடுவிவிட்ட உயிர்கொல்லியாகவேமாறிவிட்டது. இந்நிலையில் போதையென்றால் எல்லாம் கிடைக்கும் தாராளம் அப்படிப்பட்ட தன்னிறைவு.

இங்கு உணர்விழந்து அன்னியச்செலாவணியின் செழுமையுடன் அலையும் இளைஞர் கூட்டத்திற்கு அமிர்தம் வார்ப்பது போன்று அழகான பறவைக்கு அறிமுகம் வேண்டுமா என்ற தப்பான எண்ணத்தில் தப்பிக்க வழிகளிருந்தும் மூழ்கின்ற நிலையில் பாலியல் நரகத்தில் அமுதென்று விசம் பருகுவதுபோன்று எயிட்ஸ் நோயின் பிடியில் சிக்குவதாய் …எனின் வலசைபோகும் பறவை வழிதோறும் எத்தனை தெருக்கரை பிச்சைக்கார்க்கு கற்பை பிச்சையிட்டிருக்கும் என்று எண்ணிக் கொள்ள முனைந்தால் எவ்வளவு நல்லது

மருத்துவம் வியாபாரமாகி.. தொண்டுடன் தொடரபுடையோர் நிலை தவறி ஏதோ தேசத்தில் நுழைவதாய் ஒருபுறம். மேலைத்தேயகலாசாரம் உடை தொடக்கம் நடைவரை ஆக்கிரமித்துவிட்டது. மக்கள் கையிறு நிலையில் இளைஞர்கள் மேய்ப்பானற்று மந்தைகளாகி உயர்பதவிகளில் உள்ளேர் கேள்விகளை மட்டுமன்றி விடைகளுடன் சென்றால் விடை சொல்கின்ற அறிவுத்திறனுடனும் பழிவாங்கலுக்கு பயந்து பாலியல் தீயில் வீழ்கின்ற துன்பியல் இவை யாவும் முகவரி தொலைத்த மனிதன் படும் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்

இவ்வாறன நிலையில் மருத்துவதுறை மட்டும்போதாது மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு அடையவேணடியது காலத்தின் தேவையாகும்.

அன்றேல் டெங்குநோய் பற்றி தற்போது உள்ள நிலையைவிட மிகமோசமான நிலையை எதிர்கௌ;ள வேண்டியே அமையும் முன்பு டெங்குநோய்க்கான கிருமி எமது குருதியில் காணப்படவில்லை என்றால் ஏற்கககூடிய விடயம் எனறே கூறவேண்டும் ஆனால் தற்போது எமது குருதியில் இல்லை என்று சொல்ல முடியாத விடயமாகிவிட்டது அவ்வாறே எயிட்ஸ் நோயின் பரவல் காணப்படும் நிலையே உள்ளது எனினும் எயிட்ஸ் குறித்து கருதின் காலவோட்டத்தில் சுமார் பத்துவருடங்களில் பெரியதொரு குடித்தொகை நோயின் பிடியில் சிக்கிவிட்ட பரிதாபத்தை அறியலாம். எனெனில் .இங்கு டெங்கு போனறல்லாது எயிட்ஸ் நோய்க்குரிய கிருமிதொற்றி பல வருடங்களின் பின்பே அறிகுறிகள் தென்படுவதே வழமை இதனாலே இவ்வாறு அமைகின்றது அதாவது சில சமயம் ஜந்து ஆறு வருடங்களில் அறிகுறி தென்படலாம் நோயாளியின் நீர்;ப்பீடணத்தின் வீரியத்தை பொறுத்து இந்நோய் சுமார் பதினைந்து வருடங்களின் பின் கூட இனம்காணப்படலாம்

தற்போது கவனக்கலைப்பான்கள் அதிகரித்து விட்டன பாலியல்ரீதியான ஈர்வை மிகக் கூடி விட்டது இதைவிட சீரழியும் சமுகத்திற்கு சொன்னால் விளங்காது எனினும் விழிப்புற தவறின் பாவம் அறியாதவர்களாய் சில நோய்நிலை அதாவது குருதிப்புற்று நோய் குருதியுறையாநோய் உடையவர்கள் குருதி மாற்றிட்டின் போதுதொற்றுக்கு உள்ளாவது எயிட்ஸ் நோயின் வரலாற்றை புரட்டிப்பார்பின் அறியலாம் இன்னும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தொடக்கம் தாதியர் ஆய்வுகூட பரிசேதகர் வரை குருதியினுர்டு தொற்றை பெற்று எளிதில் நோயாளியாகும் ஆபத்தான பாதையில் பயணிக்கவேண்டியது காலத்தின் வெகுமதி என்றே ஆகிவிடும் எயிட்ஸ்நோயாளி ஒருவரை கையாளும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் இனம் காணப்பட நோயாளியை கையாளும் போது கடைப்பிடிக்க தவறும் போது ஏற்படும் பரிதாபத்தையே சுட்டி நிற்கின்றது

பொதுவாக எயிட்ஸ் நோய் தொற்றுடையோர் இனம் காணப்படும் போது அவரால் தொற்றுக்குஆளான பலர் .இருப்புது சகஜம் மேலும் பாலியல் உணர்வென்பதுநோய் பற்றி சிந்திக்குமா என்பது விடை காணமுடியாத வினாவேயாகும் .இன்னும் போதையில் உடற்சுத்தம் மறந்த நிலை மற்றும் தம்மை தாமே காயப்படுத்தும் மனநிலை இந்தநிலையிலா…????. ஒருவர் பாதுகாப்பான உடலுறவிலா …?? ? நகைப்புக்குரிய விடயமல்லவா அது

மேலும் போரின் பின் பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் விதவையாக்கப்பட்டநிலை இதை மெருகேற்றும் வண்ணம் போரில் ஆண்கள் கொல்லப்பட்டமை அத்துடன் வாழ்வில் முதன்முதலாக வேலை தேடி செல்கின்றனர் இவை யாவுமே விரும்பியோ விரும்பாமலே பாலியல் பண்டத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாகின்ற நிலையில் வறுமையும் வலுச்சேர்க்கும் என்றால் தவறில்லை ஈராக் யுத்தத்தின் பின் சிரியா யோர்தானில் தஞ்சாம் புகுந்த அகதிகள் நிலை பற்றி உலகத்தின் பார்வை அவ்வாறே அமைகின்றது இதுபோலவே தலிபான்களின் வீழ்ச்சியுடன் இறுக்கமான கலாசாரம் தளர்வடைந்ததால் எயிட்ஸ் நோய்த்தெற்று எதிர்கொள்ளப்பட்டமை நடந்தேறிய விடயமே ஆகும் இவ்வாறன நலிவுற்ற நிலைகளை இலக்காகக் கொண்டு பாலியல் தொழில் முகவர்களும் நகர ஆரம்பிக்காமல் இருப்பார்கள் என்றால் அது மடமைத்தனம் எனறே கூறவேண்டும். எயிட்ஸ் பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம் போரின் பின் எம்மினம் பெரியதொரு திறந்த கலாசாரத்தினுள் நுழைந்து ஓரு வருடம் கடந்துவிட்டது கண்ணுக்குதெரியா பெரியதொரு அழிவை எதிர்கொள்கிறது ஆகவே காலம் கடந்தபின் எனினும் ..எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு உருவாகுமா அன்றேல் தொற்று தன் முழு வீச்சத்துடன் பரவிவிடும் என்புதெ உறுதி இதன் பின் மருத்துவத்துறையால் எயிட்ஸ் நோய்க்கட்டுபாடு என்பது அவ்வளவு சுலபமானதாக அமையமாட்டாது இன்னும் மருத்துவத்துறையால் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கோடிட்டுகாட்டப்படும் விடயமாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து கூட நோயின் தீவிரத்தன்மை குறைக்குமேயன்றி குணப்படுத்த மாட்டாது எனவே இக்கொடிய நோயின் விசமத்தனமான பரவல் கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு யாவர்க்கும் உரியதே

’பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம் ஆனால்
விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும்.

தமிழ் சமுகம் எதிர்கொள்ளுமா.....




……….
போரின் கனதி….. யுத்தம் முடிவுற்று இரண்டு வருடத்தை நெருங்கும் நிலை கலாசாரசீழிவுகள் கரைபுரண்டு ஓடும் பரிதாபகதியில் எயிட்ஸ் நோய் விசமத்தனமாகவே பரவும் காலத்தின் கையிறுநிலை அதில் கடவுள் தான் வரவேண்டும்
ஆண்மை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன விதவைகள் எண்ணிக்கை 89 பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளது. இங்கு தான் மேலும் சிந்திக்க வேண்டும் . இவர்களில் தங்கிவாழ்வோர் பலர். அதிலும் குறிப்பாக பாடசாலை செல்ல வேண்டிய கட்டாய வயதினர். இவர்கள் சிறுவர் தொழிலாழிகளாகும் நிர்க்கதி. போரில் ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதனால் குடும்ப பாரத்தையும் இவர்களே சுமக்கவேண்டிய தலைவிதி
அத்துடன் போரில் ஊனமுற்றோர் இவ்வாறான நிலையில் இவர்கள் பக்கம் உலகமும் உதவும் உள்ளங்களும் தம் பார்வையை திருப்பாதவிடத்து ஈராக் மற்றம் ஆப்கான் அகதிகள் பாலியல்பண்டத்தையே விற்கும் பரிதாபகதியில் உள்ளமை உலகம் நேரில் தரிசித்த நியதியேயாகும். இவ்வாறே எம்சமுகத்திலும் இலட்சக்கணக்கானோரின் எதிர்காலம் என்னவென்றே கேள்விக்குறியாக உள்ளது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் எவருமே இவர்கள் விடயத்தில் கண்ணெடுத்துப் பாத்ததாகத் தெரியவில்லை.
இவர்களைப் பொறுத்தவகையில் இடப்பெயர்வுகள் நலிவுந்ந உறைவிட வசதிகள் வருமானமமின்மை பிள்ளைகளின் சுமை வாழ்க்கைச் செலவு தொழில்வாய்ப்பின்மை இழப்புக்களினால் இத்துப்போய்விட்டது இவர்களின் இதயம். உளரீதியாக நொந்துபோன ஓர் சமுகம் இதே நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பாலியல் சார்கொடூரங்கள் வன்முறைகள் சுரண்டல்கள் போன்றவற்றினால் மேலும் வலுவாகவே உளரீதியாகப் பாதிப்படைகின்றனர்.
வுpதவைகள் வன்முறைகளால் மற்றும் இயற்கை அனர்த்தற்கள் நோய்கள் தற்கொலைகள் இவற்றினால் கணவன்மாரை இழந்தவர்களாவே உள்ளனர். இவர் பெரும்பாலும் இளம்வயதினராகவே உள்ளனர். எனவே பாலியல் துனபுறுத்தல்களுக்கும் அதனோடு விபச்சாரத்தினுள் நுழைவதுமான ஓர் துன்பநிலையே தொடர்கின்றது.
அண்மையில் வெளியான சுப்பர்ஸ்ரார் ரஜினியின் எந்திரன் படத்தினை உன்னிப்பாக நோக்கினால் இயந்திரமனிதனுக்கு உணர்வைக் கொடுத்ததனால் அந்த விஞ்ஞானி படும் அவஸ்த்தை. அதுவும் பாலியல் உணர்வை கொடுத்துவிட்டமை. இங்கு இளம் விதவைகள் என்னும் விடயத்தில் மறுவாழ்வு என்பது எதுஎன்ற கனதிமிக்க வினாவிற்கு விடை காணவேண்டிய நிலையே உள்ளது உடற்றெழிலியல் ரீதியாக இவர்களை எல்லைப்படுத்த முடியாது இது இவ்வாறிருக்க கண்கொத்திப்பாம்புகள் போன்று பாலியல் முகவர்களும் படையெடுக்கும் சூழல் அதுதாண்டி போரின் பின் எயிட்ஸ் நோய்த்தாக்கம் பற்றி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சான்று பகரத்தவறவில்லை என்பதும் கோடிட்டுக்காட்ட வேண்டிய விடயமே ஆகும் . எனவே விபச்சாரம் அதனூடு எயிட்ஸ் உயிர்கொல்லி நோயின் பிடியில் மாழ்வதைக்காட்டினும் மறுவாழ்வுஎன்பது அர்த்தம் பெறுகின்றது மேலும் விபச்சரத்தின் விசமத்தனமான பரவல் எம்சமுகத்திற்கு பெரும் அழிவையே தரும் நிலையில் மக்கள் விழிப்புற வேண்டியது காலத்தின் தேவையேயாகும்

Sunday, January 2, 2011

எயிட்ஸ் நோயின் விசமத்தனமான பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு அவசியம்

(ஊடுருவும் உயிர் கொல்லி உணர்த்து உண்மை)தினக்குரல் பத்திரிகையில் வெளியான காணொளிவீச்சுக்கான விமர்சனம்



கனவுகள் பூக்கின்ற வயது அது வண்ணத்துப்பூச்சியின் சிறகின் கீழ் வரமெல்லாம் வசித்திட கேட்டும் மெல்லிய காற்றின் சங்கீதம் காதில் மெல்லிசையாய் ரசித்திட தோன்றும் பூமியை பூப்பந்தாட எண்ணும் வாலிபம் அது. கனவுகளும் கற்பனைகளும் கைகால் முளைத்த காற்றாய், காற்றில் பறக்க முதுகில் சுமக்கும் கைபோல எதிர்கால கனவுகள், ஏராளம் கனதியாய் சுமக்கின்ற இளைஞர்கள் நோக்கி உன் ஆற்றல் கண்டு உலகின் அதிசயங்கள் உன்னைத் தொடர்வதா? இல்லை உயிர்கொல்லி உன்னுள் நுழைவதா? என்று இளைஞனின் ஆற்றலையும் அவன் வாழ்வை உருக்குலைக்கும் உயிட்ஸ் நோயையும் ஆரம்பப் சுவடுகளாகக் கொண்டு விரைகின்றது. “ஊடுருவும் உயிர்கொல்லி..”.

ஊடுருவும் உயிர்கொல்லியானது மருத்துவ கலாநிதி வெ.நாகநாதனால் உருவாக்கப்பட்ட காணெளி வீச்சு. இது எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. அதே வேளையில் சமுதாய சீரழிவுகளின் பல மையக் கருக்களையும் இனம் காட்டுகின்றது.

சமகாலத்திற்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான கருத்தை தெளிவுறுத்துகின்றது. சமுதாய இருள் பற்றியும், இந்நிலை தொடரின் நரகத்திற்கு ஒப்பான ஓர் சமுகம் உருவாகும் எதிர்காலம் எதிரிடையாகவே உள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

இங்கு இருள் சூழ் சமூகத்தில் உலக வழமைகள் மாறிவிட்டன. வசதி, வாய்ப்புக்கள் பெருகிவிட்டன. கலாச்சார சீரழிவுகள், கருச்சிதைவுகள், கண்டதும் காதல் தொட்டு அலைபேசியூடான அறிமுகமில்லாத காதல் வரை விபச்சாரம் விவாகரத்துக்கள் இவை தாண்டி இளவயதுக்கற்பம் இன்னும் தொடர் துன்பியல் நிலைகள் இளவயதில் விதவையாக்கப்பட்டு வறுமையின் பிடியில் போரில் ஆண்கள் கொல்லப்பட்ட நிலையில் குடும்பபாரத்தை சுமக்கும் பரிதாரபகதியில் இளம் பெண்கள் இளைஞர்கள் வேலையின்றி வீதி தோறும் அன்னியச் செலாவணியின் செழுமையுடன் இவ்வாறு நகர்கின்றன. இவையாவும் ஒரே திசையில் தான் செல்கின்றன. இவற்றின் கூட்டு விளைவுகளும் அவ்வாறே தொடர்கின்றன.

இந்த நகர்வுகள் யாவற்றையும் உலகின் பார்வையில்.. உன்னிப்பாக உற்று நோக்குகின்றார்கள். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்தானிகரின் அறிக்கையின்படி சிரியாவில் தஞ்சம் புகுந்த ஈராக் அகதிகள் படுமோசமான பொருளாதார நிலை காரணமாக இரகசியமாகவே அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனே பாலியல் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள பாலியல் பண்டத்தின் தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்து செல்கிறது. ஐ.நா.வின் அறிக்கை இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஈராக்கிய பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றது.

சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்களே குடும்பபாரத்தை சுமக்க வேண்டியுள்ளது ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள் ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர் என்று கூறுகிறார். இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்பகன்னிர் மடத்தைச் சேர்ந்த அருட் சகோதரி மேரிக்ளோட்.

அவர் மேலும் கூறுகையில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்று வட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன்முதலாக வெளிவரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலை இல்லாத் திண்டாட்டத்தின் வீதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதை தவிர வேறு எந்த வேலை வாய்ப்பும் அவர்களால் பெறமுடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.

ஒன்றாக வாழும் மூன்று ஈராக்கிய சகோதரர்கனளின் ஒருவர் மாறி (ஒருவராக) அவர்கள் இரவில் “தொழிலுக்கு” செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் பேசப்பட முடியாத விடயமாகவே உள்ளது.

இந்நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய தேவையை ஊடுருவும் உயிர் கொல்லி அதாவது காலத்தின் தேவையை உணர்த்துகின்றது.

எயிட்ஸ் நோயின் பாதிப்புக்களை எடுத்துரைத்துக் கொண்டு இனம் காணுதல் என்பது உச்சகட்ட வேகத்துடன் விறுவிறுப்புடனும் அமைய வேண்டிய தேவையையும் லியுறுத்தி “பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம்” ஆனால் விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும் என்று எதிரொலிக்கின்றது. திரும்புகின்ற திசைகளில் எல்லாம் இல்லாவிடின் நம் சமூகமும் நகரமாகும் நிலையில் அதற்கு நாமே பொறுப்பாளிகளாகிவிடும் வேதனையை உணர்த்துகின்றது. இத்தோடு நின்றுவிடாது ஆபத்து இலக்கினரையும் அடையாளமிட்டு காட்டுகின்றது அறிமுகமில்லாத பாலியல் உறவு தொட்டு அனேகருடனான பாலியல் தொடர்பு வரை என்றும் பாலியல் தொழில் வாலிபத்தின் வயதின் எல்லைவவரை தான் அதாவது மாதவிடாய் நிறுத்தம் வரை என்று அழுத்தம் திருத்தமாக அடித்துரைக்கின்றது. அதன்பின் வறுமையும் நோயும் தான் உலக பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியல் வரலாறு என்கிறது.

இவ்வாறான உலக வழமைகளுடன் ஒப்பிடும் போது நாம் எமது மண்ணில் போரின் பின் இளம் விதவைகள் பல்லாயிரக்கணக்கில் உருவாகியுள்ள நிலையில் எமது சமூகத்தில் மேற்படி நிலை உருவாகாது என்பது எமது எமது சமூகத்தை காலவோட்டத்தில் கலாசார பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் சிதைந்து நோயுற்ற சமூகமாக அழிவின் விழிம்பில் தள்ளி விடும் அபாய நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை சமூக ஆர்வலர் யாவரும் அறிதல் வேண்டும். அத்தோடு நின்றுவிடாது உயிர்கொல்லியின் விசமத்தனான பரவலை தடுக்க. விழிப்புணர்வடைதலில் தேவையை உணர்த்தி நிற்கிறது.

எயிட்ஸ் நோயாளியின் மனம்

எயிட்ஸ் நோய் என்றால் ஏதோ கொடிய நோய் வந்தால் மரணம்.விஞ்ஞானம் வியப்புடன் பார்க்கவில்லை. விழிபிதுங்கவே பார்க்கின்றது. தலைமேல் கை வைக்கின்றது. தன்னால் முடியவில்வையே குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க…. கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கூட நோயைக்குணப்படுத்தமாட்டாது. நோயின் தீவிரத்தன்மையையும் அவஸ்தைகளையும் சற்றே குறைக்கும் ஆயுளை சிறிதளவே அதிகரிக்கச் செய்யும் இப்படி ஒரு பூவுலக நரகம் அதை அனுபவிப்பவன் மனம் அது தினமும் செத்துக்கொண்டிருக்கின்ற கொடுமை ஏற்க மறுக்கும் வலி ஆய்வுகூட நோய்க்கூற்றை ஏற்கமறுப்பதும் வேறுநபரினது மாறிவிட்டதே என்ற எண்ணம் பல வைத்தியசாலைகளில் திரும்பத்திரும்ப சோதித்தல் இப்படி ஒரு ஏற்கமுடியாத மனநிலை
இன்னும் கோபம் கொப்பளிக்கின்ற உணர்வு சிறுசம்பவங்களுக்கே மிகையளவு கோபத்தை வெளிப்படுத்தல் அது தாண்டி வன்முறைளினுள் நகர்தல் இப்படி ஒரு உணர்வு குழப்பம் நோயாளி ஆகிவிட்டேனே என்ற மனக்கவலை கண்ணீர் சிந்தியும் சிந்தாத மனக்குழப்பம் இன்னும் மனதில் முற்றுப்புள்ளியா இல்லை இது கமாவா அஸ்தமனமா இல்லை அதுநோக்கியா முடிவில்லாதுதொடரும் வினாக்கள் விரைகிறதா மரணம் இல்லை வீழ்ந்துவிட்டேனா மரணத்துள் நோயுடன் வாழ்கின்றேனா இல்லை தினமும் இறக்கின்றேனா எப்போது எத்தனை நாளில் இல்லை எத்தனை செக்கனில் வெடிக்குமோ என்பதுபோல் ஒர் எண்ணம்
நினைவாற்றல் குன்றிப்போதல் மரணம் பற்றிய எண்ணம் மறந்துபோகாது மீளெழுந்த வண்ணம் அதனால் அறியாததோர் பதற்றம் களைப்பு மூச்சுவிடமுடியத கனதி தலை தொடங்கி கால்வரை எதோ ஒர் நோய் உணரப்படுதல் உறவுகளை புறக்கணித்தல்
இன்னும் பயம் அமைதியின்மை தூக்கம் தூரவிலகிவிட்ட நிலை இன்னும் மனச்சோர்வு உடலில் மாறுபட்ட வலிகள் உணவின் மேல் வெறுப்பு உணவிருந்தும் உண்ணமுடியாத விரக்தி தற்கொலை வரை நகரும் துன்பியல் இவை யாவும் மேலும் வலுச்சேர்க்கப்படுவதாய் நோய் இனங்காணப்பட்ட ஆதரவற்ற நிலை என்பன அமைகின்றன. இதனூடு தற்கொலையும் தனக்குத்தானே தீங்கிளைத்தல் வேலையிழப்பு
இதைவிட வதிவிட இழப்பு அதாவது நோய் இனங்காணப்பட்டதனால் நோயாளி வீட்டில் ஒதுக்கபடுதல் அல்லது புறக்கணிக்கப்படுதல் இதற்கு நோய் தொற்றல் பற்றிய தவறான எண்ணக்கருக்கள் இச்செயற்பாடுகளை வலுச்சேர்க்கின்றன. மற்றும் மருத்துவச் செலவுகள் குணப்புடத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இவை நோயின் கனதியில் காத்திரமாகவே பங்களிக்கின்றன.
இத்துடன் சமுகத்தின் கேரப்பிடியில் நோய்த்தொற்றும் பாலியல் நடத்தையுமே சற்று அதிகமாக விமர்சிக்கப்படுவதால் நோயாளி மட்டுமல்ல நோயாளியின் உறவினர்கள் கூட வெளியில் தலைகாட்ட முடியாத கோரம் இவை யாவையும் எண்ணிப்பார்க்கின்றபொழுது சுட்ட மண்ணிலே மீனாகத்துடிக்கும் நோயாளியின் மனதிற்கு ஆதரவு கொடுக்கும் விதமான வேதனை தீர்க்கும் முகமான அனுதாபம் மிக்க ஆற்றுப்படுத்தல் வேண்டிநிற்கின்றது .

ஊடுருவும் உயிர்கொல்லி .......

எயிட்ஸ் நோய் பற்றி எல்லோரும் அறிந்திருப்பினம் இதற்கு மருந்துகளே,
தடுப்பூசிகளோ இல்லை குணப்படுத்த முடியாது தொற்றுக்கு உள்ளான நோயாளியின் உடல்
ஆரோக்கியம் பெனுவதற்கான மருந்துகள் கூட மிகவும் விலை உயர்ந்தவை இம்மருந்துகள்
மில்லியன் கணக்கில் செலவிட வேண்டி ஏற்படலாம். எனினும் நோயாளியின் வாழ்
நாளை அதிகரிப்பது என்பது மாதக்கணக்கில் அல்லது சில வருடங்களாக என்றுதான்
அமையும் நோய்த்தொற்று ஏற்பட்டு 10-15 வருடங்களின் பின் கூட நோயின் அறிகுறி
தெனப்படலாம் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் உதாரணமாக 30 வயதில்
நோய்க்கிருமி தொற்றுதல் அடைத்தவர் நோயாளியாகஅறிகுறிகளுடன் தென்படுவதற்கு 10
– 15 வருடங்கள் செல்லுமாயின் குறித்த நபர் 45 வயதில் அண்மித்தே நோயால்
பாதிக்கப்படுவார் எனக் கருதின் நாம் சற்று சிந்திப பின் இவர் இனங்
காணப்படாதே தனது பாலியல் உயிர்த்துடிப்புள்ள வயதுப் பருவத்தை கடந்து விடுவார்.
(sexsualy active age) அத்துடன் மிக அதிகளவில் நோயை ஏனையோருக்கும்
கடத்திவிடுவார். எனவே இவர் நோயாளியாக நோயின் பிடியில் சிக்கியமை
அறியப்படும் விதமாக அறிகுறிகள் தென்படும் காலகட்டத்தில் இவரால் நோய்த்
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நீண்டதொரு பட்டியலை ஆ;கிவிடும்.
இந்நோய்களை தொற்றல் வழிமுறைகள் என்றும் போது பாதுகாப்பற்ற பாலியல்
தொடர்புகள் என்பது முக்கியமானது எமது மண்ணில் கட்டுக் கடங்காத பாலியல்
தொடர்புகள் நவீன நாகரிக மாற்றம் என்று ஆகிவிட்டது. இதனால் ஏற்படும் நோய்த்
தொற்று பற்றி கருத்தில் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரும் உணர
வேண்டிய விடயமேயாகும். இது பற்றி கூறுவதால் தீரப் போவதில்லை. இத்துடன்
இன்னோர் படி மேலாக தெற்றலுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படுவதில் பலத்த சிரமம்
நிலவுகின்றது இதில் இவர்கள் தாமாக இனம் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இதனால் மருத்துவரை நாடுவதும் இல்லை. இங்கு தொற்றுக்கு உள்ளானவர்கள் ஏதேனும்
நோய் நிலையில் சிகிச்சை பெறும் போது தவறுதலாகவே இனம் காணப்படுகின்றனர்.
இனம் காண்பது ஒரு சிரமம் இனம் காணப்பட்டவர் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இப்படி ஒரு மனநிலை உள்ளதால் இனங்காண முற்படாது. நோய்த் தொற்றுக்கு உள்ளான
பலரும் சமூகத்தில் காணப்படலாம்.

இப்படியான நிலையில் நோய்த் தொற்றல் தொடர்பாக கவனத்தில் கொள்வது மிகவும்
முக்கியமானதாகவே உள்ளது.

இங்கு நடைமுறையில் மருத்துவத்துறையில் பயன்படுத்தும் ஊசிகள், சத்திரசிகிச்சை
சந்திகள், மற்றும் கருவிகள் உரிய முறையில் சுத்திகரிக்கப்படுவதுடன் அவற்றினை
மறுதடவை பாவிப்பதை தவிர்த்துள்ளமையும் காணப்படுகின்றது. இத்துடன் குருதி மாற்றீடு
குருதித் திரவ இழைய மாற்றீடு செயற்கை கருத்தரிப்பு போன்வற்றிலும் நோய்த்
தொற்றுந் தகவு ஆய்ந்தறியப்படுகின்றது.

இவற்றைவிட சிகை அலங்கரிப்பு நிலையங்களில் சவர அலகுகள் மறுதடவை பயன்படுத்தாது
விடப்படுகின்றன இவை மெச்சத்தக்க விடயமேயாகும்.

இவ்வாறே போதை மருந்துப் பாவனையாளர்களின் ஊசிகள், மற்றும் சில மருத்துவ
முறைகள் என்பவற்றாலும் ஏற்படலாம் என்றும் எமது சமூகத்தில் கண்ணுக்கு புலப்படாத
சில வழி முறைகள் காணப்படுகின்றன.

அதாவது காது குத்தல், காவடியில் செடில் குத்துதல் இவையும் நோயை உண்டு பண்ண எதுவாகலாம்

காதுகுத்துவது என்பது தற்போது நாகரிகம் மிக்க செயலாகவே காணப்படுகிறது நவீன
உலகில் உடலில் முடிந்தவரைஎங்கெங்கெல்லாம் குத்தமுடியுமோ அங்கெல்லாம் தோடுகள்
வளையல்கள் என்று மாட்டிக் கொள்ளும் வழமை தான் நாகரிகம் என்று உருவாகி உள்ளது.
இதில் நாகரிகத்தின் உச்சக் கட்டத்திற்கு சென்றவர்களில் நோய்த்
தொற்றலுக்கான சந்தர்ப்பம் அதிகமாக் காணப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்றே
சொல்லலாம்.. இவர்களுக்கு பயன்படுத்தும் ஊசி வகை ஏனைய நோய்த்தொற்று
இல்லாதவர்களிற்கும் பாவிக்கப்படின் இவர்களினூடு நோயானது குற்றும் ஊசியூடு பரவும்
என்பதில் ஐயமில்லை. இவ்வாறே நகர்ந்து கொண்டு செல்லும் போது பாரம்பரிய
ரீதியாக தோடு குற்றும் சிறுமியர் கூட எந்தப் பாவமும் அறியாமல் ஆட்கொல்லி
நோயின் கோரப்பிடியில் சிக்க வேண்டி ஏற்படும். இதனால் நாளடைவில்
ஆரோக்கியமற்ற இளம் சந்ததியே உருவாகிவிடும் தன்மை காணப்படுகிறது.

உயிர் கொல்லி நோயின் ஊடுருவலை தடுத்து நிறுத்த எத்தணிப்போம். செயற்படுவோம்
நாளைய நம் சமூகத்திற்காக….உயிர் பெறவேணடும் சமுதாய ஆர்வலர்கள்… செயற்பாடுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Saturday, January 1, 2011

அதிகரித்துவிட்ட நிலையில் நொயை இனம் காணும் வேகமும் அதிகரிக்க வேண்டும்

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் யாவற்றினதும் தொடர் நிலைகள் எவ்வாறு அமையும் என்பதை கருதும் முன்பு எமது சூழலில் நோய்களின் தொற்றும் தகவும் அவற்றை இனம் காண்பதும் எந்த நிலையில் உயிர்த் துடிப்புடன் இருக்கின்றதா என்று எண்ணும் நிலையே காணப்படுகின்றது. சமூக நோய்கள் பற்றி சமூக ஆர்வலர்கள் தமது குறைந்த பட்ச பங்களிப்பை காண்பிக்கின்ற நிலையில் மக்கள் விழிப்புற வேண்டும் என்ற தேவையே உள்ளது.

     சமூக நோய்கள் என்னும் போது… கொனேரியா, சிரிலிசு, கொனேரியா அல்லாத சிறுநீர் அழற்சி, பாலுறுப்பு உண்ணி பாலுறுப்பு ஹேர்பிஸ், எயிட்ஸ் என்பன அடங்குகின்றன. 
     இவை தொடர்பான அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பினும் இவற்றின் பரவல் வழிமுறைகள் பற்றி போதிய அறிவின்மையும் விழிப்புணர்வும் மிகவும் மந்த கதியில் காணப்படுவது தெளிவாக இனம் காணக் கூடியதாகவே உள்ளது.

     ஒரு சமூகத்தில் நோய்த் தொற்றும் என்னும் போது உதாரணமாக பனிப்பட்டியினது அதன் சிறுபகுதியே நீரின் மேல் தென்படுகிறது. கண்ணுக்கு புலப்படாத மிகப் பெரிய பகுதி காணப்படுகின்றது. அது போன்றே நோய் இனம் காணப்பட்டவர்களும் நோய் இனம் காணப்படாத தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் காணப்படலாம். இவ்வாறெ நோய்த் தொற்றுக்குள்ளாகி இனம் காணப்படாது இருப்பவர் எண்ணிக்கை பொதுவாக மிகப் பெரிய ஒரு தொகையாகவே காணப்படும்.

     நோய்த்தொற்ற தொடர்பான சில விளக்கமின்மையும், நோய்த் தொற்றுக் குள்ளானவர்களின் இனங்காண்பதில் காண்பிக்கும் ஒத்துழைப்பு, மற்றும் அவர்களை இனம் காண்பதற்கான சோதனை முறைகளும் செயற்றிறன் குன்றிய நிலையில் அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் மிக அதிகமாகிவிட்ட தாகவே காணப்படுகின்றது.

     அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் என்பது அலைபேசிகள் ஊடும் அவை தாண்டி முகவர்களினூடும் அமைகின்றன. இவை யாவுமே நோய்த் தொற்றுக்கான வாய்ப்புக்களாகவே காணப்படுகின்றன. அறிமுகம் இல்லாத தொடர்புகள் என்றிருப்பினும் அவை அனுபவம் மிக்க தொடர்பு;களாகவே காணப்படுகின்றன. தொடர்ந்து இவ்வாறான தொடர்புகளால் பாதிப்பு ஏற்பட மாட்டாது என்ற எண்ணம் தொடர்புகளை நாடுபவர்களிடையே காணப்படுகிறது. அதாவது நெடுநாள் நிலைக்க மாட்டாது என்ற நம்பிக்கையும் இதைவிட அழகுக்கு முன்னுரிமை காணப்படுதல். இவ்வாறாக தொடர்புகள் மேலும் மேலும் வலுவடைகின்றன. இதனால் நோய்த் தொற்று என்பது இங்கு மிக வலுவாகவே காணப்படும்.    இது தாண்டி நோய்த் தொற்று தொடர்பான தடுப்பு முறைகள் பலவும் செயலிழந்து போகின்றன. அதாவது நோய்த் தொற்று தடுப்பு முறைகளும் மிகவும் நம்பகமற்றனவாக காணப்படுகின்றன. இங்கு பயன்படும் காப்புறைகள் நம்பகமற்றனவாகவும் காலாவதியானவையாகவும் காணப்படுகின்றன மற்றும் சில செயற்கை நார் வகையூடு hiv வைரஸ் புகும் தகவு காணப்படுவது பற்றிஆய்வுக் கற்கைகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றைவிட நோய்க்கிருமிகள் குருதி, ஆண்களில் சுக்கிலப்பாயம், பெண்களின் யோனிமடற் சுரப்பு, பெண்களின் கருப்பைக் கழுத்துச் சுரப்புகள் போன்றவற்றில் காணப்படும் என்பது யாவரும் அறிந்ததே இவற்றினூடான தொடர்பை இயன்றவரை குறைக்க முற்படினும் ஏற்றளவில் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

     இன்னும் நமது பார்வையை முரசு கரைதல் அல்லது பல் ஈறுகளினூடாக குருதி கசிவு காணப்படுபவர்களின் பக்கம் நகரத்தின் இவர்களில் மேற்குறிப்பிட்ட திரவ பாய்பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்து தன்மை காணப்படுகிறது. இதனால் வாய் வழியான பாலியல் உறவின் மூலம் கூட பற்களின் ஈறுகளினூடான குருதிக் கசிவுகளினாலும் நோய்த்தொற்று ஏற்படும் என்பது உறுதியாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் என்பது ஆபத்து என்றே அமைகின்றது. அறிமுகமில்லா பெண் - ஆண் தொடர்போ ஆண் - பெண் தொடர்போ ஆரோக்கியமற்றது. இவ்வாறு அதிகரித்துவிட்ட நிலையில் நொயை இனம் காணும் வேகமும் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் சில வருடங்களில் நோய்த்தொற்றுக்கு ஆளாகதவர்கள் எண்ணிக்கையை விட தொற்றியவர்கள் எண்ணிக்கை சாதனை படைத்துவிடும்.

கருச்சிதைவுகள் நிறைந்து விட்ட நிலையில்; பாலியல் தொற்று எப்படி இருக்கும்

கருச்சிதைவுகள் இருக்குமென்றால் பாதுகாப்பான உடலுறவா நடக்கிறது. என்று மனதில் கேள்விஎழத்தான் வேணடும் இன்னும்கருவறைகள் கல்லறை யாகிப்போண நிலையில்கட்டாயமாகவே எழும் என்பதில் ஜயமில்லை… கருச்சிதைவு பற்றி பத்திரிகைகளிலும் சமூகத்திலும் மிகவும் அதிகமாகNவு பேசப்படுகின்றன. அதாவது மிகைப்படுத்தி அல்ல. உண்மையில் அவை அதிகரித்துவிட்ட நிலையை தான் குறிப்பிடுகின்றன. 
     கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன என்றால் என்ன உண்மை…. முன்னைய காலங்களில் தான் புராணங்களில் கண்ணால் பார்த்தால் கர்ப்பக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. அவ்வாறு நாம் இப்போதும் கருத முடியாது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. பாலியலை மையப்படுத்தியே தொலைக்காட்சி விளம்பரங்கள் தொடக்கம் அலைபேசிக்காணொளி …செல்போன்…. வரை வந்துவிட்ட நிலையில் இனம் வயதினரை உணர்விழக்கச் செய்யும் விதமாகவே இவை யாவும் நகர்கின்றன.

     இது இவ்வாறிருக்க பாலியல் நோய்கள் தொடர்பாக அறிந்து கொள்ள முடிவதில்லை. இங்கு உள்ள குறையாதென்றால் பாலியல் என்ற வரையறையில் தான் பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் காணப்படுகின்றது. பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல தொடர்பான கருத்துக்களை; மக்கள் அறியவில்லை ஆனால் சமூகத்தில் போதுமான அளவு பாலியல் சிந்தனை பரவியே உள்ளது. இங்கு; பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் பற்றிய அறிவு மிகவும் பூச்சியம் என்றே கூறவேண்டியுள்ளது. பாலியல் நோய்த்தொற்று என்பது பாதுகாப்பான உடலுறவில் குறைக்கப்படுகின்றது. ஆணுறைகள், பெண் உறைகள் போன்றவற்றின் பயன்பாடும் சரியான பாவனை முறையும் அதிகமாணவர்கள் அறியாத நிலையிலேயே…. உள்ளனர் என்ற எண்ணமே இங்கு உருவாகின்றது.

     இவ்வாறான சாதனங்களை அவற்றை பயன்படுத்தும் உரியமுறையில் அல்லாமல் சாதாரணமாக  பயன்படுத்தும் போது கர்ப்பம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம். இவ்வற்றின் நம்பகத்தன்மை என்பன இங்கு செல்வாக்கு செலுத்துகின்றன இவை பயன்படத்தும் கிழிதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மிகையளவு இனப்பெருக்கச் சுரப்புக்கள் ஏற்படும் போது இவற்றினைத் தாண்டி  நோய்க்கிருமிகள் மற்றும் விந்தனுக்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதைவிட சிலவகை தயாரிப்பு மாதிரியூடாக ர்ஐஏ கிருமி கடந்து செல்லும் தகவும் உள்ளது.

     இவ்வாறு பாதுகாப்பு உறைகளிலுள்ளேயே எத்தனை பாதுகாப்பின்மை இருக்கிறது என்றால் கருச்சிதைவுகள் வழமையாகிவிட்டன மறுதலையாக பார்க்கும்போது கர்ப்பம் தரிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாக கூறுவதனால் பாதுகாப்பற்ற உடலுறவே நடைபெற்றுள்ளது.

     எனவே நமது சமூகத்தில் தற்போது எல்லா வசதி வாய்ப்புக்களும் அதிகரித்து விட்டன. (எயிட்ஸ் கிருமிவரை) கலாச்சார சீரழிவுகள் மலிந்துவிட்டன. இந்த நிலையில் பாலியல் நோய்க்கான இனம்காணல் துரிதப்பட வேண்டும். அதாவது ஓர் சமூகத்தில் தொற்றுநோய் பற்றி பார்த்தால் பனிக்கட்டி ஒன்று நீரில் அமிழ்ந்து மிதக்கும் போது பார்பப்pன் பெரும்பகுதி நீரில் அமிழ்நது காணப்படும் ;இவ்வாரே நோய் இனம் காணப்படும் மக்கள் கூட்டம் நீரின் மேல் வெளிக்காணப்படும் பகுதியாகவும் இனம் காணப்படாத மக்கள் கூட்டம் நீரில் அமிழ்ந்து காணப்படும் பகுதியாகவும் தான் ஒப்பிடமுடியும்
     எனவே நோய் தொடர்பான இனம் காணல் மிக முக்கியமாக உள்ளது. இது மிகவும் உயிர்த்துடிப்புடன் அமையவும் வேண்டும். இனம் காணப்படும் போது தரவுகள் எதுவும் வெளியிடப்படமாட்டா. இரகசியமாகவே பேணப்படும். இனம் காணப்பட தவறும் பட்சத்தில், ஒருவரால் பலர் தொற்றுக் ஆளாவதும் இன்னும் தாதியர், ஆய்வுகூட பரிசோதகர்கள், சத்திர கிகிச்சை மருத்துவர்கள் போன்ற பலரும் எயிட்ஸ் நோயாளியை கையாளும் போது தாம் எடுத்துக் கொள்ளும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து தவறி சாதாரண நோயாளிகள் உடன் மேற்கொள்ளும் நடைமுறையை கையாளப்படும் போது இவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு ..குருதிமாற்றீடு மற்றும் ஏனைய தொற்றல் ஏற்படக்கூடிய முறைகளின் ஊடாகவும் அனேகர் தொற்றுக்கு ஆளாதலை தவிர்க்க இது பெரிதும் உதவும்.