எயிட்ஸ் விழிப்புணர்வு

Thursday, December 1, 2011

2010 aids day

யாழ்.மாவட்டத்தில் 42 எயிட்ஸ் நோயாளர்கள்! எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்: சுகாதார பணிப்பாளர்
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 04:05.09 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 42 எயிட்ஸ் நோயாளர்களில் 23 நோயாளர்கள் இறந்துள்ளதுடன் 19 நோயாளர்கள் வாழ்ந்து வருவதாகவும் இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.
ஏ9 தரைவழிப்பாதையின் திறப்பு மற்றும் நீண்டகாலப் போர் அதனாலான இடப்பெயர்வுகள் போன்றவற்றினால் எங்களுடைய கலாச்சார விழுமிய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டு விட்டதாக கூறிய பணிப்பாளர்.
இதிலிருந்து மீட்சி பெறுவதற்கு எமது சமுகத்திற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனச் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள எண்ணிக்கையை விடவும் அதிகமானவர்கள் எமது சமூகத்தில் வாழ்கின்றனர்.
அவர்களும் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் முலமா ஏனையவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். போருக்குப் பின்னரான அண்மைக்காலத்தில் மட்டும் மாவட்டத்தில் சுமார் அதிகமானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக. அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment