எயிட்ஸ் விழிப்புணர்வு

Sunday, January 2, 2011

எயிட்ஸ் நோயின் விசமத்தனமான பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு அவசியம்

(ஊடுருவும் உயிர் கொல்லி உணர்த்து உண்மை)தினக்குரல் பத்திரிகையில் வெளியான காணொளிவீச்சுக்கான விமர்சனம்



கனவுகள் பூக்கின்ற வயது அது வண்ணத்துப்பூச்சியின் சிறகின் கீழ் வரமெல்லாம் வசித்திட கேட்டும் மெல்லிய காற்றின் சங்கீதம் காதில் மெல்லிசையாய் ரசித்திட தோன்றும் பூமியை பூப்பந்தாட எண்ணும் வாலிபம் அது. கனவுகளும் கற்பனைகளும் கைகால் முளைத்த காற்றாய், காற்றில் பறக்க முதுகில் சுமக்கும் கைபோல எதிர்கால கனவுகள், ஏராளம் கனதியாய் சுமக்கின்ற இளைஞர்கள் நோக்கி உன் ஆற்றல் கண்டு உலகின் அதிசயங்கள் உன்னைத் தொடர்வதா? இல்லை உயிர்கொல்லி உன்னுள் நுழைவதா? என்று இளைஞனின் ஆற்றலையும் அவன் வாழ்வை உருக்குலைக்கும் உயிட்ஸ் நோயையும் ஆரம்பப் சுவடுகளாகக் கொண்டு விரைகின்றது. “ஊடுருவும் உயிர்கொல்லி..”.

ஊடுருவும் உயிர்கொல்லியானது மருத்துவ கலாநிதி வெ.நாகநாதனால் உருவாக்கப்பட்ட காணெளி வீச்சு. இது எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. அதே வேளையில் சமுதாய சீரழிவுகளின் பல மையக் கருக்களையும் இனம் காட்டுகின்றது.

சமகாலத்திற்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான கருத்தை தெளிவுறுத்துகின்றது. சமுதாய இருள் பற்றியும், இந்நிலை தொடரின் நரகத்திற்கு ஒப்பான ஓர் சமுகம் உருவாகும் எதிர்காலம் எதிரிடையாகவே உள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

இங்கு இருள் சூழ் சமூகத்தில் உலக வழமைகள் மாறிவிட்டன. வசதி, வாய்ப்புக்கள் பெருகிவிட்டன. கலாச்சார சீரழிவுகள், கருச்சிதைவுகள், கண்டதும் காதல் தொட்டு அலைபேசியூடான அறிமுகமில்லாத காதல் வரை விபச்சாரம் விவாகரத்துக்கள் இவை தாண்டி இளவயதுக்கற்பம் இன்னும் தொடர் துன்பியல் நிலைகள் இளவயதில் விதவையாக்கப்பட்டு வறுமையின் பிடியில் போரில் ஆண்கள் கொல்லப்பட்ட நிலையில் குடும்பபாரத்தை சுமக்கும் பரிதாரபகதியில் இளம் பெண்கள் இளைஞர்கள் வேலையின்றி வீதி தோறும் அன்னியச் செலாவணியின் செழுமையுடன் இவ்வாறு நகர்கின்றன. இவையாவும் ஒரே திசையில் தான் செல்கின்றன. இவற்றின் கூட்டு விளைவுகளும் அவ்வாறே தொடர்கின்றன.

இந்த நகர்வுகள் யாவற்றையும் உலகின் பார்வையில்.. உன்னிப்பாக உற்று நோக்குகின்றார்கள். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்தானிகரின் அறிக்கையின்படி சிரியாவில் தஞ்சம் புகுந்த ஈராக் அகதிகள் படுமோசமான பொருளாதார நிலை காரணமாக இரகசியமாகவே அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனே பாலியல் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள பாலியல் பண்டத்தின் தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்து செல்கிறது. ஐ.நா.வின் அறிக்கை இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஈராக்கிய பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றது.

சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்களே குடும்பபாரத்தை சுமக்க வேண்டியுள்ளது ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள் ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர் என்று கூறுகிறார். இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்பகன்னிர் மடத்தைச் சேர்ந்த அருட் சகோதரி மேரிக்ளோட்.

அவர் மேலும் கூறுகையில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்று வட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன்முதலாக வெளிவரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலை இல்லாத் திண்டாட்டத்தின் வீதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதை தவிர வேறு எந்த வேலை வாய்ப்பும் அவர்களால் பெறமுடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.

ஒன்றாக வாழும் மூன்று ஈராக்கிய சகோதரர்கனளின் ஒருவர் மாறி (ஒருவராக) அவர்கள் இரவில் “தொழிலுக்கு” செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் பேசப்பட முடியாத விடயமாகவே உள்ளது.

இந்நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய தேவையை ஊடுருவும் உயிர் கொல்லி அதாவது காலத்தின் தேவையை உணர்த்துகின்றது.

எயிட்ஸ் நோயின் பாதிப்புக்களை எடுத்துரைத்துக் கொண்டு இனம் காணுதல் என்பது உச்சகட்ட வேகத்துடன் விறுவிறுப்புடனும் அமைய வேண்டிய தேவையையும் லியுறுத்தி “பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம்” ஆனால் விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும் என்று எதிரொலிக்கின்றது. திரும்புகின்ற திசைகளில் எல்லாம் இல்லாவிடின் நம் சமூகமும் நகரமாகும் நிலையில் அதற்கு நாமே பொறுப்பாளிகளாகிவிடும் வேதனையை உணர்த்துகின்றது. இத்தோடு நின்றுவிடாது ஆபத்து இலக்கினரையும் அடையாளமிட்டு காட்டுகின்றது அறிமுகமில்லாத பாலியல் உறவு தொட்டு அனேகருடனான பாலியல் தொடர்பு வரை என்றும் பாலியல் தொழில் வாலிபத்தின் வயதின் எல்லைவவரை தான் அதாவது மாதவிடாய் நிறுத்தம் வரை என்று அழுத்தம் திருத்தமாக அடித்துரைக்கின்றது. அதன்பின் வறுமையும் நோயும் தான் உலக பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியல் வரலாறு என்கிறது.

இவ்வாறான உலக வழமைகளுடன் ஒப்பிடும் போது நாம் எமது மண்ணில் போரின் பின் இளம் விதவைகள் பல்லாயிரக்கணக்கில் உருவாகியுள்ள நிலையில் எமது சமூகத்தில் மேற்படி நிலை உருவாகாது என்பது எமது எமது சமூகத்தை காலவோட்டத்தில் கலாசார பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் சிதைந்து நோயுற்ற சமூகமாக அழிவின் விழிம்பில் தள்ளி விடும் அபாய நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை சமூக ஆர்வலர் யாவரும் அறிதல் வேண்டும். அத்தோடு நின்றுவிடாது உயிர்கொல்லியின் விசமத்தனான பரவலை தடுக்க. விழிப்புணர்வடைதலில் தேவையை உணர்த்தி நிற்கிறது.

எயிட்ஸ் நோயாளியின் மனம்

எயிட்ஸ் நோய் என்றால் ஏதோ கொடிய நோய் வந்தால் மரணம்.விஞ்ஞானம் வியப்புடன் பார்க்கவில்லை. விழிபிதுங்கவே பார்க்கின்றது. தலைமேல் கை வைக்கின்றது. தன்னால் முடியவில்வையே குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க…. கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கூட நோயைக்குணப்படுத்தமாட்டாது. நோயின் தீவிரத்தன்மையையும் அவஸ்தைகளையும் சற்றே குறைக்கும் ஆயுளை சிறிதளவே அதிகரிக்கச் செய்யும் இப்படி ஒரு பூவுலக நரகம் அதை அனுபவிப்பவன் மனம் அது தினமும் செத்துக்கொண்டிருக்கின்ற கொடுமை ஏற்க மறுக்கும் வலி ஆய்வுகூட நோய்க்கூற்றை ஏற்கமறுப்பதும் வேறுநபரினது மாறிவிட்டதே என்ற எண்ணம் பல வைத்தியசாலைகளில் திரும்பத்திரும்ப சோதித்தல் இப்படி ஒரு ஏற்கமுடியாத மனநிலை
இன்னும் கோபம் கொப்பளிக்கின்ற உணர்வு சிறுசம்பவங்களுக்கே மிகையளவு கோபத்தை வெளிப்படுத்தல் அது தாண்டி வன்முறைளினுள் நகர்தல் இப்படி ஒரு உணர்வு குழப்பம் நோயாளி ஆகிவிட்டேனே என்ற மனக்கவலை கண்ணீர் சிந்தியும் சிந்தாத மனக்குழப்பம் இன்னும் மனதில் முற்றுப்புள்ளியா இல்லை இது கமாவா அஸ்தமனமா இல்லை அதுநோக்கியா முடிவில்லாதுதொடரும் வினாக்கள் விரைகிறதா மரணம் இல்லை வீழ்ந்துவிட்டேனா மரணத்துள் நோயுடன் வாழ்கின்றேனா இல்லை தினமும் இறக்கின்றேனா எப்போது எத்தனை நாளில் இல்லை எத்தனை செக்கனில் வெடிக்குமோ என்பதுபோல் ஒர் எண்ணம்
நினைவாற்றல் குன்றிப்போதல் மரணம் பற்றிய எண்ணம் மறந்துபோகாது மீளெழுந்த வண்ணம் அதனால் அறியாததோர் பதற்றம் களைப்பு மூச்சுவிடமுடியத கனதி தலை தொடங்கி கால்வரை எதோ ஒர் நோய் உணரப்படுதல் உறவுகளை புறக்கணித்தல்
இன்னும் பயம் அமைதியின்மை தூக்கம் தூரவிலகிவிட்ட நிலை இன்னும் மனச்சோர்வு உடலில் மாறுபட்ட வலிகள் உணவின் மேல் வெறுப்பு உணவிருந்தும் உண்ணமுடியாத விரக்தி தற்கொலை வரை நகரும் துன்பியல் இவை யாவும் மேலும் வலுச்சேர்க்கப்படுவதாய் நோய் இனங்காணப்பட்ட ஆதரவற்ற நிலை என்பன அமைகின்றன. இதனூடு தற்கொலையும் தனக்குத்தானே தீங்கிளைத்தல் வேலையிழப்பு
இதைவிட வதிவிட இழப்பு அதாவது நோய் இனங்காணப்பட்டதனால் நோயாளி வீட்டில் ஒதுக்கபடுதல் அல்லது புறக்கணிக்கப்படுதல் இதற்கு நோய் தொற்றல் பற்றிய தவறான எண்ணக்கருக்கள் இச்செயற்பாடுகளை வலுச்சேர்க்கின்றன. மற்றும் மருத்துவச் செலவுகள் குணப்புடத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இவை நோயின் கனதியில் காத்திரமாகவே பங்களிக்கின்றன.
இத்துடன் சமுகத்தின் கேரப்பிடியில் நோய்த்தொற்றும் பாலியல் நடத்தையுமே சற்று அதிகமாக விமர்சிக்கப்படுவதால் நோயாளி மட்டுமல்ல நோயாளியின் உறவினர்கள் கூட வெளியில் தலைகாட்ட முடியாத கோரம் இவை யாவையும் எண்ணிப்பார்க்கின்றபொழுது சுட்ட மண்ணிலே மீனாகத்துடிக்கும் நோயாளியின் மனதிற்கு ஆதரவு கொடுக்கும் விதமான வேதனை தீர்க்கும் முகமான அனுதாபம் மிக்க ஆற்றுப்படுத்தல் வேண்டிநிற்கின்றது .

ஊடுருவும் உயிர்கொல்லி .......

எயிட்ஸ் நோய் பற்றி எல்லோரும் அறிந்திருப்பினம் இதற்கு மருந்துகளே,
தடுப்பூசிகளோ இல்லை குணப்படுத்த முடியாது தொற்றுக்கு உள்ளான நோயாளியின் உடல்
ஆரோக்கியம் பெனுவதற்கான மருந்துகள் கூட மிகவும் விலை உயர்ந்தவை இம்மருந்துகள்
மில்லியன் கணக்கில் செலவிட வேண்டி ஏற்படலாம். எனினும் நோயாளியின் வாழ்
நாளை அதிகரிப்பது என்பது மாதக்கணக்கில் அல்லது சில வருடங்களாக என்றுதான்
அமையும் நோய்த்தொற்று ஏற்பட்டு 10-15 வருடங்களின் பின் கூட நோயின் அறிகுறி
தெனப்படலாம் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் உதாரணமாக 30 வயதில்
நோய்க்கிருமி தொற்றுதல் அடைத்தவர் நோயாளியாகஅறிகுறிகளுடன் தென்படுவதற்கு 10
– 15 வருடங்கள் செல்லுமாயின் குறித்த நபர் 45 வயதில் அண்மித்தே நோயால்
பாதிக்கப்படுவார் எனக் கருதின் நாம் சற்று சிந்திப பின் இவர் இனங்
காணப்படாதே தனது பாலியல் உயிர்த்துடிப்புள்ள வயதுப் பருவத்தை கடந்து விடுவார்.
(sexsualy active age) அத்துடன் மிக அதிகளவில் நோயை ஏனையோருக்கும்
கடத்திவிடுவார். எனவே இவர் நோயாளியாக நோயின் பிடியில் சிக்கியமை
அறியப்படும் விதமாக அறிகுறிகள் தென்படும் காலகட்டத்தில் இவரால் நோய்த்
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நீண்டதொரு பட்டியலை ஆ;கிவிடும்.
இந்நோய்களை தொற்றல் வழிமுறைகள் என்றும் போது பாதுகாப்பற்ற பாலியல்
தொடர்புகள் என்பது முக்கியமானது எமது மண்ணில் கட்டுக் கடங்காத பாலியல்
தொடர்புகள் நவீன நாகரிக மாற்றம் என்று ஆகிவிட்டது. இதனால் ஏற்படும் நோய்த்
தொற்று பற்றி கருத்தில் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரும் உணர
வேண்டிய விடயமேயாகும். இது பற்றி கூறுவதால் தீரப் போவதில்லை. இத்துடன்
இன்னோர் படி மேலாக தெற்றலுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படுவதில் பலத்த சிரமம்
நிலவுகின்றது இதில் இவர்கள் தாமாக இனம் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இதனால் மருத்துவரை நாடுவதும் இல்லை. இங்கு தொற்றுக்கு உள்ளானவர்கள் ஏதேனும்
நோய் நிலையில் சிகிச்சை பெறும் போது தவறுதலாகவே இனம் காணப்படுகின்றனர்.
இனம் காண்பது ஒரு சிரமம் இனம் காணப்பட்டவர் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இப்படி ஒரு மனநிலை உள்ளதால் இனங்காண முற்படாது. நோய்த் தொற்றுக்கு உள்ளான
பலரும் சமூகத்தில் காணப்படலாம்.

இப்படியான நிலையில் நோய்த் தொற்றல் தொடர்பாக கவனத்தில் கொள்வது மிகவும்
முக்கியமானதாகவே உள்ளது.

இங்கு நடைமுறையில் மருத்துவத்துறையில் பயன்படுத்தும் ஊசிகள், சத்திரசிகிச்சை
சந்திகள், மற்றும் கருவிகள் உரிய முறையில் சுத்திகரிக்கப்படுவதுடன் அவற்றினை
மறுதடவை பாவிப்பதை தவிர்த்துள்ளமையும் காணப்படுகின்றது. இத்துடன் குருதி மாற்றீடு
குருதித் திரவ இழைய மாற்றீடு செயற்கை கருத்தரிப்பு போன்வற்றிலும் நோய்த்
தொற்றுந் தகவு ஆய்ந்தறியப்படுகின்றது.

இவற்றைவிட சிகை அலங்கரிப்பு நிலையங்களில் சவர அலகுகள் மறுதடவை பயன்படுத்தாது
விடப்படுகின்றன இவை மெச்சத்தக்க விடயமேயாகும்.

இவ்வாறே போதை மருந்துப் பாவனையாளர்களின் ஊசிகள், மற்றும் சில மருத்துவ
முறைகள் என்பவற்றாலும் ஏற்படலாம் என்றும் எமது சமூகத்தில் கண்ணுக்கு புலப்படாத
சில வழி முறைகள் காணப்படுகின்றன.

அதாவது காது குத்தல், காவடியில் செடில் குத்துதல் இவையும் நோயை உண்டு பண்ண எதுவாகலாம்

காதுகுத்துவது என்பது தற்போது நாகரிகம் மிக்க செயலாகவே காணப்படுகிறது நவீன
உலகில் உடலில் முடிந்தவரைஎங்கெங்கெல்லாம் குத்தமுடியுமோ அங்கெல்லாம் தோடுகள்
வளையல்கள் என்று மாட்டிக் கொள்ளும் வழமை தான் நாகரிகம் என்று உருவாகி உள்ளது.
இதில் நாகரிகத்தின் உச்சக் கட்டத்திற்கு சென்றவர்களில் நோய்த்
தொற்றலுக்கான சந்தர்ப்பம் அதிகமாக் காணப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்றே
சொல்லலாம்.. இவர்களுக்கு பயன்படுத்தும் ஊசி வகை ஏனைய நோய்த்தொற்று
இல்லாதவர்களிற்கும் பாவிக்கப்படின் இவர்களினூடு நோயானது குற்றும் ஊசியூடு பரவும்
என்பதில் ஐயமில்லை. இவ்வாறே நகர்ந்து கொண்டு செல்லும் போது பாரம்பரிய
ரீதியாக தோடு குற்றும் சிறுமியர் கூட எந்தப் பாவமும் அறியாமல் ஆட்கொல்லி
நோயின் கோரப்பிடியில் சிக்க வேண்டி ஏற்படும். இதனால் நாளடைவில்
ஆரோக்கியமற்ற இளம் சந்ததியே உருவாகிவிடும் தன்மை காணப்படுகிறது.

உயிர் கொல்லி நோயின் ஊடுருவலை தடுத்து நிறுத்த எத்தணிப்போம். செயற்படுவோம்
நாளைய நம் சமூகத்திற்காக….உயிர் பெறவேணடும் சமுதாய ஆர்வலர்கள்… செயற்பாடுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Saturday, January 1, 2011

அதிகரித்துவிட்ட நிலையில் நொயை இனம் காணும் வேகமும் அதிகரிக்க வேண்டும்

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் யாவற்றினதும் தொடர் நிலைகள் எவ்வாறு அமையும் என்பதை கருதும் முன்பு எமது சூழலில் நோய்களின் தொற்றும் தகவும் அவற்றை இனம் காண்பதும் எந்த நிலையில் உயிர்த் துடிப்புடன் இருக்கின்றதா என்று எண்ணும் நிலையே காணப்படுகின்றது. சமூக நோய்கள் பற்றி சமூக ஆர்வலர்கள் தமது குறைந்த பட்ச பங்களிப்பை காண்பிக்கின்ற நிலையில் மக்கள் விழிப்புற வேண்டும் என்ற தேவையே உள்ளது.

     சமூக நோய்கள் என்னும் போது… கொனேரியா, சிரிலிசு, கொனேரியா அல்லாத சிறுநீர் அழற்சி, பாலுறுப்பு உண்ணி பாலுறுப்பு ஹேர்பிஸ், எயிட்ஸ் என்பன அடங்குகின்றன. 
     இவை தொடர்பான அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பினும் இவற்றின் பரவல் வழிமுறைகள் பற்றி போதிய அறிவின்மையும் விழிப்புணர்வும் மிகவும் மந்த கதியில் காணப்படுவது தெளிவாக இனம் காணக் கூடியதாகவே உள்ளது.

     ஒரு சமூகத்தில் நோய்த் தொற்றும் என்னும் போது உதாரணமாக பனிப்பட்டியினது அதன் சிறுபகுதியே நீரின் மேல் தென்படுகிறது. கண்ணுக்கு புலப்படாத மிகப் பெரிய பகுதி காணப்படுகின்றது. அது போன்றே நோய் இனம் காணப்பட்டவர்களும் நோய் இனம் காணப்படாத தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் காணப்படலாம். இவ்வாறெ நோய்த் தொற்றுக்குள்ளாகி இனம் காணப்படாது இருப்பவர் எண்ணிக்கை பொதுவாக மிகப் பெரிய ஒரு தொகையாகவே காணப்படும்.

     நோய்த்தொற்ற தொடர்பான சில விளக்கமின்மையும், நோய்த் தொற்றுக் குள்ளானவர்களின் இனங்காண்பதில் காண்பிக்கும் ஒத்துழைப்பு, மற்றும் அவர்களை இனம் காண்பதற்கான சோதனை முறைகளும் செயற்றிறன் குன்றிய நிலையில் அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் மிக அதிகமாகிவிட்ட தாகவே காணப்படுகின்றது.

     அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் என்பது அலைபேசிகள் ஊடும் அவை தாண்டி முகவர்களினூடும் அமைகின்றன. இவை யாவுமே நோய்த் தொற்றுக்கான வாய்ப்புக்களாகவே காணப்படுகின்றன. அறிமுகம் இல்லாத தொடர்புகள் என்றிருப்பினும் அவை அனுபவம் மிக்க தொடர்பு;களாகவே காணப்படுகின்றன. தொடர்ந்து இவ்வாறான தொடர்புகளால் பாதிப்பு ஏற்பட மாட்டாது என்ற எண்ணம் தொடர்புகளை நாடுபவர்களிடையே காணப்படுகிறது. அதாவது நெடுநாள் நிலைக்க மாட்டாது என்ற நம்பிக்கையும் இதைவிட அழகுக்கு முன்னுரிமை காணப்படுதல். இவ்வாறாக தொடர்புகள் மேலும் மேலும் வலுவடைகின்றன. இதனால் நோய்த் தொற்று என்பது இங்கு மிக வலுவாகவே காணப்படும்.    இது தாண்டி நோய்த் தொற்று தொடர்பான தடுப்பு முறைகள் பலவும் செயலிழந்து போகின்றன. அதாவது நோய்த் தொற்று தடுப்பு முறைகளும் மிகவும் நம்பகமற்றனவாக காணப்படுகின்றன. இங்கு பயன்படும் காப்புறைகள் நம்பகமற்றனவாகவும் காலாவதியானவையாகவும் காணப்படுகின்றன மற்றும் சில செயற்கை நார் வகையூடு hiv வைரஸ் புகும் தகவு காணப்படுவது பற்றிஆய்வுக் கற்கைகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றைவிட நோய்க்கிருமிகள் குருதி, ஆண்களில் சுக்கிலப்பாயம், பெண்களின் யோனிமடற் சுரப்பு, பெண்களின் கருப்பைக் கழுத்துச் சுரப்புகள் போன்றவற்றில் காணப்படும் என்பது யாவரும் அறிந்ததே இவற்றினூடான தொடர்பை இயன்றவரை குறைக்க முற்படினும் ஏற்றளவில் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

     இன்னும் நமது பார்வையை முரசு கரைதல் அல்லது பல் ஈறுகளினூடாக குருதி கசிவு காணப்படுபவர்களின் பக்கம் நகரத்தின் இவர்களில் மேற்குறிப்பிட்ட திரவ பாய்பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்து தன்மை காணப்படுகிறது. இதனால் வாய் வழியான பாலியல் உறவின் மூலம் கூட பற்களின் ஈறுகளினூடான குருதிக் கசிவுகளினாலும் நோய்த்தொற்று ஏற்படும் என்பது உறுதியாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் அறிமுகமில்லாத பாலியல் தொடர்புகள் என்பது ஆபத்து என்றே அமைகின்றது. அறிமுகமில்லா பெண் - ஆண் தொடர்போ ஆண் - பெண் தொடர்போ ஆரோக்கியமற்றது. இவ்வாறு அதிகரித்துவிட்ட நிலையில் நொயை இனம் காணும் வேகமும் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் சில வருடங்களில் நோய்த்தொற்றுக்கு ஆளாகதவர்கள் எண்ணிக்கையை விட தொற்றியவர்கள் எண்ணிக்கை சாதனை படைத்துவிடும்.

கருச்சிதைவுகள் நிறைந்து விட்ட நிலையில்; பாலியல் தொற்று எப்படி இருக்கும்

கருச்சிதைவுகள் இருக்குமென்றால் பாதுகாப்பான உடலுறவா நடக்கிறது. என்று மனதில் கேள்விஎழத்தான் வேணடும் இன்னும்கருவறைகள் கல்லறை யாகிப்போண நிலையில்கட்டாயமாகவே எழும் என்பதில் ஜயமில்லை… கருச்சிதைவு பற்றி பத்திரிகைகளிலும் சமூகத்திலும் மிகவும் அதிகமாகNவு பேசப்படுகின்றன. அதாவது மிகைப்படுத்தி அல்ல. உண்மையில் அவை அதிகரித்துவிட்ட நிலையை தான் குறிப்பிடுகின்றன. 
     கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன என்றால் என்ன உண்மை…. முன்னைய காலங்களில் தான் புராணங்களில் கண்ணால் பார்த்தால் கர்ப்பக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. அவ்வாறு நாம் இப்போதும் கருத முடியாது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. பாலியலை மையப்படுத்தியே தொலைக்காட்சி விளம்பரங்கள் தொடக்கம் அலைபேசிக்காணொளி …செல்போன்…. வரை வந்துவிட்ட நிலையில் இனம் வயதினரை உணர்விழக்கச் செய்யும் விதமாகவே இவை யாவும் நகர்கின்றன.

     இது இவ்வாறிருக்க பாலியல் நோய்கள் தொடர்பாக அறிந்து கொள்ள முடிவதில்லை. இங்கு உள்ள குறையாதென்றால் பாலியல் என்ற வரையறையில் தான் பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் காணப்படுகின்றது. பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல தொடர்பான கருத்துக்களை; மக்கள் அறியவில்லை ஆனால் சமூகத்தில் போதுமான அளவு பாலியல் சிந்தனை பரவியே உள்ளது. இங்கு; பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் பற்றிய அறிவு மிகவும் பூச்சியம் என்றே கூறவேண்டியுள்ளது. பாலியல் நோய்த்தொற்று என்பது பாதுகாப்பான உடலுறவில் குறைக்கப்படுகின்றது. ஆணுறைகள், பெண் உறைகள் போன்றவற்றின் பயன்பாடும் சரியான பாவனை முறையும் அதிகமாணவர்கள் அறியாத நிலையிலேயே…. உள்ளனர் என்ற எண்ணமே இங்கு உருவாகின்றது.

     இவ்வாறான சாதனங்களை அவற்றை பயன்படுத்தும் உரியமுறையில் அல்லாமல் சாதாரணமாக  பயன்படுத்தும் போது கர்ப்பம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம். இவ்வற்றின் நம்பகத்தன்மை என்பன இங்கு செல்வாக்கு செலுத்துகின்றன இவை பயன்படத்தும் கிழிதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மிகையளவு இனப்பெருக்கச் சுரப்புக்கள் ஏற்படும் போது இவற்றினைத் தாண்டி  நோய்க்கிருமிகள் மற்றும் விந்தனுக்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதைவிட சிலவகை தயாரிப்பு மாதிரியூடாக ர்ஐஏ கிருமி கடந்து செல்லும் தகவும் உள்ளது.

     இவ்வாறு பாதுகாப்பு உறைகளிலுள்ளேயே எத்தனை பாதுகாப்பின்மை இருக்கிறது என்றால் கருச்சிதைவுகள் வழமையாகிவிட்டன மறுதலையாக பார்க்கும்போது கர்ப்பம் தரிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாக கூறுவதனால் பாதுகாப்பற்ற உடலுறவே நடைபெற்றுள்ளது.

     எனவே நமது சமூகத்தில் தற்போது எல்லா வசதி வாய்ப்புக்களும் அதிகரித்து விட்டன. (எயிட்ஸ் கிருமிவரை) கலாச்சார சீரழிவுகள் மலிந்துவிட்டன. இந்த நிலையில் பாலியல் நோய்க்கான இனம்காணல் துரிதப்பட வேண்டும். அதாவது ஓர் சமூகத்தில் தொற்றுநோய் பற்றி பார்த்தால் பனிக்கட்டி ஒன்று நீரில் அமிழ்ந்து மிதக்கும் போது பார்பப்pன் பெரும்பகுதி நீரில் அமிழ்நது காணப்படும் ;இவ்வாரே நோய் இனம் காணப்படும் மக்கள் கூட்டம் நீரின் மேல் வெளிக்காணப்படும் பகுதியாகவும் இனம் காணப்படாத மக்கள் கூட்டம் நீரில் அமிழ்ந்து காணப்படும் பகுதியாகவும் தான் ஒப்பிடமுடியும்
     எனவே நோய் தொடர்பான இனம் காணல் மிக முக்கியமாக உள்ளது. இது மிகவும் உயிர்த்துடிப்புடன் அமையவும் வேண்டும். இனம் காணப்படும் போது தரவுகள் எதுவும் வெளியிடப்படமாட்டா. இரகசியமாகவே பேணப்படும். இனம் காணப்பட தவறும் பட்சத்தில், ஒருவரால் பலர் தொற்றுக் ஆளாவதும் இன்னும் தாதியர், ஆய்வுகூட பரிசோதகர்கள், சத்திர கிகிச்சை மருத்துவர்கள் போன்ற பலரும் எயிட்ஸ் நோயாளியை கையாளும் போது தாம் எடுத்துக் கொள்ளும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து தவறி சாதாரண நோயாளிகள் உடன் மேற்கொள்ளும் நடைமுறையை கையாளப்படும் போது இவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு ..குருதிமாற்றீடு மற்றும் ஏனைய தொற்றல் ஏற்படக்கூடிய முறைகளின் ஊடாகவும் அனேகர் தொற்றுக்கு ஆளாதலை தவிர்க்க இது பெரிதும் உதவும்.