எயிட்ஸ் விழிப்புணர்வு

Thursday, December 1, 2011

2011 aids day

யாழில் 43 பேருக்கு H.I.V எயிட்ஸ் தொற்று

யாழ்ப்பாணத்தில் போருக்கு பின்னைய காலங்களில் சமூகக் கட்டுப்பாடுகள் சீர்குலைக்கப்பட்டு பாலியல் நோய்கள் இறக்குமதியாகிக் கொண்டு இருக்கின்றது எனவும் இதுவரை யாழில் 43 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாகவும் 23 பேர் எயிட்ஸ் நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு தியாகிகள் அறங்கொடை நிலையத்தில் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். இலங்கையில் வடமாகாணம் இந்த எயிட்ஸ் நோயின் தாக்த்தில் ஜந்தாவது இடத்தில் உள்ளது. வடமாகாணத்தில் 503 பேர் எச்.ஜ.வி தொற்குக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் யாழ்ப்பாணத்தில் 43 பேர் எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment