எயிட்ஸ் விழிப்புணர்வு

Sunday, January 2, 2011

எயிட்ஸ் நோயின் விசமத்தனமான பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு அவசியம்

(ஊடுருவும் உயிர் கொல்லி உணர்த்து உண்மை)தினக்குரல் பத்திரிகையில் வெளியான காணொளிவீச்சுக்கான விமர்சனம்



கனவுகள் பூக்கின்ற வயது அது வண்ணத்துப்பூச்சியின் சிறகின் கீழ் வரமெல்லாம் வசித்திட கேட்டும் மெல்லிய காற்றின் சங்கீதம் காதில் மெல்லிசையாய் ரசித்திட தோன்றும் பூமியை பூப்பந்தாட எண்ணும் வாலிபம் அது. கனவுகளும் கற்பனைகளும் கைகால் முளைத்த காற்றாய், காற்றில் பறக்க முதுகில் சுமக்கும் கைபோல எதிர்கால கனவுகள், ஏராளம் கனதியாய் சுமக்கின்ற இளைஞர்கள் நோக்கி உன் ஆற்றல் கண்டு உலகின் அதிசயங்கள் உன்னைத் தொடர்வதா? இல்லை உயிர்கொல்லி உன்னுள் நுழைவதா? என்று இளைஞனின் ஆற்றலையும் அவன் வாழ்வை உருக்குலைக்கும் உயிட்ஸ் நோயையும் ஆரம்பப் சுவடுகளாகக் கொண்டு விரைகின்றது. “ஊடுருவும் உயிர்கொல்லி..”.

ஊடுருவும் உயிர்கொல்லியானது மருத்துவ கலாநிதி வெ.நாகநாதனால் உருவாக்கப்பட்ட காணெளி வீச்சு. இது எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. அதே வேளையில் சமுதாய சீரழிவுகளின் பல மையக் கருக்களையும் இனம் காட்டுகின்றது.

சமகாலத்திற்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான கருத்தை தெளிவுறுத்துகின்றது. சமுதாய இருள் பற்றியும், இந்நிலை தொடரின் நரகத்திற்கு ஒப்பான ஓர் சமுகம் உருவாகும் எதிர்காலம் எதிரிடையாகவே உள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

இங்கு இருள் சூழ் சமூகத்தில் உலக வழமைகள் மாறிவிட்டன. வசதி, வாய்ப்புக்கள் பெருகிவிட்டன. கலாச்சார சீரழிவுகள், கருச்சிதைவுகள், கண்டதும் காதல் தொட்டு அலைபேசியூடான அறிமுகமில்லாத காதல் வரை விபச்சாரம் விவாகரத்துக்கள் இவை தாண்டி இளவயதுக்கற்பம் இன்னும் தொடர் துன்பியல் நிலைகள் இளவயதில் விதவையாக்கப்பட்டு வறுமையின் பிடியில் போரில் ஆண்கள் கொல்லப்பட்ட நிலையில் குடும்பபாரத்தை சுமக்கும் பரிதாரபகதியில் இளம் பெண்கள் இளைஞர்கள் வேலையின்றி வீதி தோறும் அன்னியச் செலாவணியின் செழுமையுடன் இவ்வாறு நகர்கின்றன. இவையாவும் ஒரே திசையில் தான் செல்கின்றன. இவற்றின் கூட்டு விளைவுகளும் அவ்வாறே தொடர்கின்றன.

இந்த நகர்வுகள் யாவற்றையும் உலகின் பார்வையில்.. உன்னிப்பாக உற்று நோக்குகின்றார்கள். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்தானிகரின் அறிக்கையின்படி சிரியாவில் தஞ்சம் புகுந்த ஈராக் அகதிகள் படுமோசமான பொருளாதார நிலை காரணமாக இரகசியமாகவே அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனே பாலியல் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள பாலியல் பண்டத்தின் தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்து செல்கிறது. ஐ.நா.வின் அறிக்கை இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஈராக்கிய பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றது.

சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்களே குடும்பபாரத்தை சுமக்க வேண்டியுள்ளது ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள் ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர் என்று கூறுகிறார். இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்பகன்னிர் மடத்தைச் சேர்ந்த அருட் சகோதரி மேரிக்ளோட்.

அவர் மேலும் கூறுகையில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்று வட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன்முதலாக வெளிவரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலை இல்லாத் திண்டாட்டத்தின் வீதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதை தவிர வேறு எந்த வேலை வாய்ப்பும் அவர்களால் பெறமுடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.

ஒன்றாக வாழும் மூன்று ஈராக்கிய சகோதரர்கனளின் ஒருவர் மாறி (ஒருவராக) அவர்கள் இரவில் “தொழிலுக்கு” செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் பேசப்பட முடியாத விடயமாகவே உள்ளது.

இந்நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய தேவையை ஊடுருவும் உயிர் கொல்லி அதாவது காலத்தின் தேவையை உணர்த்துகின்றது.

எயிட்ஸ் நோயின் பாதிப்புக்களை எடுத்துரைத்துக் கொண்டு இனம் காணுதல் என்பது உச்சகட்ட வேகத்துடன் விறுவிறுப்புடனும் அமைய வேண்டிய தேவையையும் லியுறுத்தி “பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம்” ஆனால் விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும் என்று எதிரொலிக்கின்றது. திரும்புகின்ற திசைகளில் எல்லாம் இல்லாவிடின் நம் சமூகமும் நகரமாகும் நிலையில் அதற்கு நாமே பொறுப்பாளிகளாகிவிடும் வேதனையை உணர்த்துகின்றது. இத்தோடு நின்றுவிடாது ஆபத்து இலக்கினரையும் அடையாளமிட்டு காட்டுகின்றது அறிமுகமில்லாத பாலியல் உறவு தொட்டு அனேகருடனான பாலியல் தொடர்பு வரை என்றும் பாலியல் தொழில் வாலிபத்தின் வயதின் எல்லைவவரை தான் அதாவது மாதவிடாய் நிறுத்தம் வரை என்று அழுத்தம் திருத்தமாக அடித்துரைக்கின்றது. அதன்பின் வறுமையும் நோயும் தான் உலக பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியல் வரலாறு என்கிறது.

இவ்வாறான உலக வழமைகளுடன் ஒப்பிடும் போது நாம் எமது மண்ணில் போரின் பின் இளம் விதவைகள் பல்லாயிரக்கணக்கில் உருவாகியுள்ள நிலையில் எமது சமூகத்தில் மேற்படி நிலை உருவாகாது என்பது எமது எமது சமூகத்தை காலவோட்டத்தில் கலாசார பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் சிதைந்து நோயுற்ற சமூகமாக அழிவின் விழிம்பில் தள்ளி விடும் அபாய நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை சமூக ஆர்வலர் யாவரும் அறிதல் வேண்டும். அத்தோடு நின்றுவிடாது உயிர்கொல்லியின் விசமத்தனான பரவலை தடுக்க. விழிப்புணர்வடைதலில் தேவையை உணர்த்தி நிற்கிறது.

No comments:

Post a Comment