எயிட்ஸ் விழிப்புணர்வு

Saturday, November 26, 2011

மாணவர்களுடனான கருத்துப்பகிர்வில்

போரின் பின் பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் விதவையாக்கப்பட்டநிலை இதை மெருகேற்றும் வண்ணம் போரில் ஆண்கள் கொல்லப்பட்டமை அத்துடன் வாழ்வில் முதன்முதலாக வேலை தேடி செல்கின்றனர் இவை யாவுமே விரும்பியோ விரும்பாமலே பாலியல் பண்டத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாகின்ற நிலையில் வறுமையும் வலுச்சேர்க்கும் என்றால் தவறில்லை ஈராக் யுத்தத்தின் பின் சிரியா யோர்தானில் தஞ்சாம் புகுந்த அகதிகள் நிலை பற்றி உலகத்தின் பார்வை அவ்வாறே அமைகின்றது இதுபோலவே தலிபான்களின் வீழ்ச்சியுடன் இறுக்கமான கலாசாரம் தளர்வடைந்ததால் எயிட்ஸ் நோய்த்தெற்று எதிர்கொள்ளப்பட்டமை நடந்தேறிய விடயமே ஆகும் இவ்வாறன நலிவுற்ற நிலைகளை இலக்காகக் கொண்டு பாலியல் தொழில் முகவர்களும் நகர ஆரம்பிக்காமல் இருப்பார்கள் என்றால் அது மடமைத்தனம் எனறே கூறவேண்டும். எயிட்ஸ் பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம் போரின் பின் எம்மினம் பெரியதொரு திறந்த கலாசாரத்தினுள் நுழைந்து இரு வருடம் கடந்துவிட்டது கண்ணுக்குதெரியா பெரியதொரு அழிவை எதிர்கொள்கிறது ஆகவே காலம் கடந்தபின் எனினும் ..எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு உருவாகுமா அன்றேல் தொற்று தன் முழு வீச்சத்துடன் பரவிவிடும் என்பது  உறுதி இதன் பின் மருத்துவத்துறையால் எயிட்ஸ் நோய்க்கட்டுபாடு என்பது அவ்வளவு சுலபமானதாக அமையமாட்டாது இன்னும் மருத்துவத்துறையால் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கோடிட்டுகாட்டப்படும் விடயமாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து கூட நோயின் தீவிரத்தன்மை குறைக்குமேயன்றி குணப்படுத்த மாட்டாது எனவே இக்கொடிய நோயின் விசமத்தனமான பரவல் கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு யாவர்க்கும் உரியதே.. 
சிவாஜி கெல்த் விங்ஸ் அமைப்பினர் வன்னியில் மாணவர்களுடனான கருத்துப்பகிர்வில் மூலம் இம்மாணவர்கள் எய்ட்ஸ் நோயின் கட்டற்ற பரவல் குறித்து விழிப்படைவதற்கும் கல்வியில் ஏற்பட்ட நீண்டகால இடைவெளியை எதிர்கொள்ள நினைவாற்றலை வளர்க்கவும் தன்னம்பிக்கையுடன் சவால்கள் மிக்க வாழ்வை எதிர்கொள்ளவும் ஆரோக்கியம் மிக்க எதிர்கால சமுகத்தை உருப்பெற செய்யும் நோக்குடன் ஒழுக்கமைக்கப்பட்ட கருத்துப்பகிர்வுகளின் படங்கள் வருமாறு