எயிட்ஸ் விழிப்புணர்வு

Sunday, January 2, 2011

எயிட்ஸ் நோயாளியின் மனம்

எயிட்ஸ் நோய் என்றால் ஏதோ கொடிய நோய் வந்தால் மரணம்.விஞ்ஞானம் வியப்புடன் பார்க்கவில்லை. விழிபிதுங்கவே பார்க்கின்றது. தலைமேல் கை வைக்கின்றது. தன்னால் முடியவில்வையே குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க…. கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கூட நோயைக்குணப்படுத்தமாட்டாது. நோயின் தீவிரத்தன்மையையும் அவஸ்தைகளையும் சற்றே குறைக்கும் ஆயுளை சிறிதளவே அதிகரிக்கச் செய்யும் இப்படி ஒரு பூவுலக நரகம் அதை அனுபவிப்பவன் மனம் அது தினமும் செத்துக்கொண்டிருக்கின்ற கொடுமை ஏற்க மறுக்கும் வலி ஆய்வுகூட நோய்க்கூற்றை ஏற்கமறுப்பதும் வேறுநபரினது மாறிவிட்டதே என்ற எண்ணம் பல வைத்தியசாலைகளில் திரும்பத்திரும்ப சோதித்தல் இப்படி ஒரு ஏற்கமுடியாத மனநிலை
இன்னும் கோபம் கொப்பளிக்கின்ற உணர்வு சிறுசம்பவங்களுக்கே மிகையளவு கோபத்தை வெளிப்படுத்தல் அது தாண்டி வன்முறைளினுள் நகர்தல் இப்படி ஒரு உணர்வு குழப்பம் நோயாளி ஆகிவிட்டேனே என்ற மனக்கவலை கண்ணீர் சிந்தியும் சிந்தாத மனக்குழப்பம் இன்னும் மனதில் முற்றுப்புள்ளியா இல்லை இது கமாவா அஸ்தமனமா இல்லை அதுநோக்கியா முடிவில்லாதுதொடரும் வினாக்கள் விரைகிறதா மரணம் இல்லை வீழ்ந்துவிட்டேனா மரணத்துள் நோயுடன் வாழ்கின்றேனா இல்லை தினமும் இறக்கின்றேனா எப்போது எத்தனை நாளில் இல்லை எத்தனை செக்கனில் வெடிக்குமோ என்பதுபோல் ஒர் எண்ணம்
நினைவாற்றல் குன்றிப்போதல் மரணம் பற்றிய எண்ணம் மறந்துபோகாது மீளெழுந்த வண்ணம் அதனால் அறியாததோர் பதற்றம் களைப்பு மூச்சுவிடமுடியத கனதி தலை தொடங்கி கால்வரை எதோ ஒர் நோய் உணரப்படுதல் உறவுகளை புறக்கணித்தல்
இன்னும் பயம் அமைதியின்மை தூக்கம் தூரவிலகிவிட்ட நிலை இன்னும் மனச்சோர்வு உடலில் மாறுபட்ட வலிகள் உணவின் மேல் வெறுப்பு உணவிருந்தும் உண்ணமுடியாத விரக்தி தற்கொலை வரை நகரும் துன்பியல் இவை யாவும் மேலும் வலுச்சேர்க்கப்படுவதாய் நோய் இனங்காணப்பட்ட ஆதரவற்ற நிலை என்பன அமைகின்றன. இதனூடு தற்கொலையும் தனக்குத்தானே தீங்கிளைத்தல் வேலையிழப்பு
இதைவிட வதிவிட இழப்பு அதாவது நோய் இனங்காணப்பட்டதனால் நோயாளி வீட்டில் ஒதுக்கபடுதல் அல்லது புறக்கணிக்கப்படுதல் இதற்கு நோய் தொற்றல் பற்றிய தவறான எண்ணக்கருக்கள் இச்செயற்பாடுகளை வலுச்சேர்க்கின்றன. மற்றும் மருத்துவச் செலவுகள் குணப்புடத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இவை நோயின் கனதியில் காத்திரமாகவே பங்களிக்கின்றன.
இத்துடன் சமுகத்தின் கேரப்பிடியில் நோய்த்தொற்றும் பாலியல் நடத்தையுமே சற்று அதிகமாக விமர்சிக்கப்படுவதால் நோயாளி மட்டுமல்ல நோயாளியின் உறவினர்கள் கூட வெளியில் தலைகாட்ட முடியாத கோரம் இவை யாவையும் எண்ணிப்பார்க்கின்றபொழுது சுட்ட மண்ணிலே மீனாகத்துடிக்கும் நோயாளியின் மனதிற்கு ஆதரவு கொடுக்கும் விதமான வேதனை தீர்க்கும் முகமான அனுதாபம் மிக்க ஆற்றுப்படுத்தல் வேண்டிநிற்கின்றது .

No comments:

Post a Comment