tamilenn news => இலங்கை ஆட்சியாளர்களால் காலம் தொட்ட தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
அத் திட்டமிடல்கள் சிலவேளைகளில் தோல்வியைக் கண்டிருந்தாலும் கூட அண்மைக் காலத்தில் பெரு வெற்றியை ஆட்சியாளர்களுக்கு அளித்துள்ளது எனலாம்.
ஏனெனில் எம்மினத்தின் சில புல்லுருவிகள் குருவிச்சை மரம் போன்று ஒட்டி நிற்பது அவர்களுக்குத் தற்காலத்தில் ஏற்பட்ட வெற்றிகளுக்குக் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இது இவ்வாறிருக்க இலங்கையில் விபச்சாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என ஒரு அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தின் தாவடி, மானிப்பாய்ப் பகுதியில் மகரகமவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள இளம் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், அப் பெண் பாலியல் தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
எனவே இவ்வாறான சம்பவங்கள், தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளைகளில் யாழ்ப்பாண இளைஞர்களை பால் நிலை கொண்டு தாக்கும் ஒரு செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அதாவது யாழ்ப்பாண இளைஞர்களின் போராட்டங்களையும், அவர்கள் கொண்டுள்ள தமிழ்த் தேசிய உணர்வலைகளையும் திசை திருப்பும் நோக்கத்தோடும் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனலாம்.
யாழ்ப்பாபணப் பகுதிகளில், பாலியல் தொழிலில் ஈடுபடும் சிங்களப் பெண்களைக் களமிறக்கி அப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்பி அவர்களை அழிக்கும் ஒரு நயவஞ்சகச் செயல் நடந்தேறுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றது.
எனவே கடந்த கால ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களை அழிக்கும் திட்டமிடலுக்கு ஏற்ப தற்கால அரசு இச் சூழ்ச்சியைச் செய்து யாழ்ப்பாண மக்களின் கலாசாரத்தைச் சிதைத்து இளைஞர்களை இயற்கையின் உபாதைக்குள் தள்ளும் ஒரு திட்டம் நடந்தேறப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது
///////////////////////////////////////////////////////////////////
யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அரங்கேற்றப்பட்டு வந்தது சுமங்கலி எனும் விபச்சார விடுதி. ஒரு ஆணும் பெண்ணும் தங்குவதற்கு 500 ரூபாய் வீதம் அறவிடப்பட்டு விபச்சாரத்திற்கு வித்திட்டதே இந்த விடுதி.
ஆனால் இன்று யாழ்ப்பாணப் பொலிஸாரின் திடீர் முற்றுகையினால் இவ் விடுதியின் உரிமையாளர் உட்பட 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமங்கலி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடியது இவ்விடுதியும் அதன் உரிமையாளரும்.

இதில் பல மாதங்களாக அரங்கேற்றப்பட்டு வந்த விபச்சாரம் தொடர்பில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு பகிரங்கமாக நடத்தப்பட்ட விபச்சாரம் மாநகர சபை முதல்வருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியமான விடயம்.
வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் இங்கு விபச்சாரத்திற்கு வித்திடுகின்றார்கள் எனத் தெரிவித்து யாழ்.மாநகர முதல்வர், சுமங்கிலி விடுதிக்கும், அது செய்த விபச்சாரத்திற்கும் துணை புரிந்துள்ளதாகவே சந்தேகப்பட வைக்கின்றது.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்.நகரப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த சுமங்கலி விபச்சார விடுதி யாழ் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு எட்டு ஆண்களும், ஜந்து பெண்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது. யாழ்.பொலிஸாரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி உரிமையாளர் றஞ்சன் என்று அழைக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை திங்கட்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப் பகுதியால் இரு தடவைகளுக்கு மேல் யாராவது பயணிப்பார்களாக இருந்தால் அவர்களை இடைமறித்து இப் பாதை ஊடாக அடிக்கடி பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கும் தொனியில் மிரட்டல் விடுக்கப்படும்.
அத்துடன் ஆங்காங்கே இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் உள்ளே நடைபெறும் விபச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக நிற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க மேற்படி விடுதியின் உரிமையாளர் யாழ்ப்பாண அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்பது தங்களது விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக ஒரு விபச்சார விடுதியை பொலிஸாரினால் முற்றுகையிட்டு அங்குள்ளவர்களைக் கைது செய்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் இவ் விடுதியின் முற்றுகை போல் பொலிஸாரின் செயற்பாடுகள் அமையும் பட்சத்தில் அவர்கள் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை வலுப்பெறும்.
மாறாக கட்சியின் பெயரால் இவர்கள் தப்பித்துக் கொள்வதும், அதனைப் பொலிஸார் கண்டு கொள்ளாதிருப்பதும் யாழ்ப்பாணக் கலாசாரத்தைச் சட்டமே குழிதோண்டிப் புதைப்பதாகவே அர்த்தமாகும்
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக குற்றச் செயல்கள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், பாலியல் வன்முறை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதாகவும் இதனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண பிரதிக் காவல்துறை மா அதிபர் வீ.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண ஹோட்டல்கள் மற்றும் விதிகளில் அதிகளவு தங்குவதனால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.